சிங்கப்பூரில் கடந்த 2 நாட்களில், போதைப்பொருள் கடத்திய வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டுள்ள சிங்கப்பூர்
உலகளவில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மிக கடுமையான சட்டங்களை கொண்ட நாடுகளுள் சிங்கப்பூரும் ஒன்று. போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை நீக்குவது கடும் விளைவுகளுக்கு வழிவகுக்கும் என சிங்கப்பூர் (Singapore)
அரசு தெரிவித்து வருகின்றன.
எந்த வழக்கிற்கு மரண தண்டனை?
சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் (drugs), அதாவது 15 கிராமுக்கு அதிகமாக டயாமார்ஃபின், 30 கிராமுக்கு அதிகமாக கோகெய்ன், 250 கிராமுக்கு அதிகமாக மெத்தம்ஃபெட்டமைன் மற்றும் 500 கிராமுக்கு அதிகமாக கஞ்சாவை (cannabis) விற்பது, வழங்குவது, ஓரிடத்திற்கு கொண்டு செல்வது அல்லது அதை கையாள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
மரண தண்டனைக்கு எதிராக மனு தாக்கல்
சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை (death sentence) விதிப்பது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என சமூக ஆர்வலர்கள் சிலர் கூறி மனு தாக்கல் செய்துள்ளனர்.
மரண தண்டனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
கடந்த ஆகஸ்ட் மாதம் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் மரண தண்டனைக்கு எதிரான வழக்கை சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது. மேலும், “சமூகத்திற்கு துன்புறுத்தல் என கருதப்படும் ஒரு பிரச்னையை தீர்க்கும் விதமாகவே” சட்டம் எழுதப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்திருந்தது.
மரண தண்டனை – சிங்கப்பூர் அரசு விளக்கம்
மரண தண்டனை உலகளவில் பாதுகாப்பான இடங்களுள் ஒன்றாக சிங்கப்பூரை மாற்றுவதற்கு உதவியாக உள்ளதாக சிங்கப்பூர் அரசு விளக்கம் தெரிவிக்கின்றன. மேலும்,”பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகத்திற்கு மிக மோசமான தீங்கு விளைவிக்கும்” குற்றங்களுக்கு மட்டுமே இத்தண்டனை விதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாமிநாதன் செல்வராஜுக்கு மரண தண்டனை
2013ம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மலேசியரான சாமிநாதன் செல்வராஜு தூக்கிலிடப்பட்டார்.
மரண தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு
அந்த வகையில் கடந்த 2 நாட்களில், போதைப்பொருள் கடத்திய 3 பேருக்கு (சாமிநாதன் செல்வராஜு,முகமது ரிஸ்வான் பின் அக்பர் ஹுசைன்,மூன்றாவது குற்றவாளியின் பெயர் வெளியிடப்படவில்லை) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இந்த ஆண்டில் மரண தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில், கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து இதுவரையிலான 22 ஆண்டுகளில் இல்லாத வகையில் இது அதிக எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
