
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50% வரி விதிப்பால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க சந்தையில் விலை அதிகரித்துள்ளன.
இதனால் இந்திய இறக்குமதி பொருட்கள் அமெரிக்காவில் புறக்கணிப்பு செய்யப்படுகின்றன. இந்த புறக்கணிப்பால் தமிழ்நாட்டில் சிறு, குறு , நடுத்தர நிறுவனங்கள் கடும் பாதிப்படைந்துள்ளன. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர், ஈரோட்டின் 20 லட்சம் ஜவுளி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி:
அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை தொழில் ஸ்தம்பிப்பு
திருப்பூரில் ஜவுளித்தொழில் கடும் பாதிப்பு
திருப்பூரில் இருந்து உலக சந்தைக்கு ஆண்டுக்கு ரூ. 45 ஆயிரம் கோடி அளவிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி ஆகி வந்தன. அதில் அமெரிக்காவுக்கு ரூ.15 ஆயிரம் கோடி அளவிலான ஆயத்த ஆடை ஏற்றுமதி ஆகின.
50% வரி விதிப்பை காரணம் காட்டி ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பல ஆர்டர்களை அமெரிக்க இறக்குமதியாளர்கள் நிறுத்தி வைப்பு
இதனால் திருப்பூரில் ரூ.4000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேக்கம்
ஏற்றுமதி தடையால் மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி முதல் ரூ.2000 கோடி அளவிலான ஆயத்த ஆடைகள் வர்த்தகம் இழப்பு

ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான வர்த்தகம் இழப்பு
இதனால் 2 ஆயிரம் நிறுவனங்கள் பாதிப்பு
இதனால் பல ஜவுளிஆலைகள் மூடப்படும் அபாயம்
ஏற்றுமதி தடையால் உற்பத்தி மந்தம். இதனால் ஈரோட்டில் இருந்து ஜவுளி மூலப்பொருட்கள் வாங்குவதை நிறுத்தியது டெல்லி, மும்பை, அகமதாபாத் நகரங்கள்
இதனால் ஈரோட்டில் மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யும் 3000 நிறுவனங்கள் பாதிப்பு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
ஜவுளித்தொழிலை நம்பியிருக்கும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழக்கும் அபாயம்

கோவை நகை உற்பத்தியாளர்கள் கவலை:
கோவையில் இருந்து தங்க நகைகள், காசு மாலைகள், மாங்கா மாலைகள் என 30% ஆபரணத் தங்கம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகி வந்தன
50% வரியின் எதிரொலியால் தற்போது கோவையில் இருந்து ஆபரணத் தங்கத்தை வாங்க அமெரிக்கா முன் வராததால் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும் என்று நகை உற்பத்தியாளர்கள் கவலை

50 லட்சம் இறால் தொழிலாளர்கள் பாதிப்பு:
அமெரிக்காவுக்கு தமிழ்நாட்டில் இருந்து 40% இறால் ஏற்றுமதியாகி வந்தது. அமெரிக்கா விதித்த 50% வ் வரியால் இந்த ஏற்றுமதி பாதிப்பு
மரணக்கானத்தில் உள்ள 80க்கும் மேற்பட்ட இறால் குஞ்சிகள் உற்பத்தி நிறுவனங்களில் 50% வரி எதிரொலியால் இறால் குஞ்சுகள் தேக்கம். இதனால் மாதம் ரூ.18 ஆயிரம் கோடி இழப்பு. ஆண்டுக்கு ரூ.1000 கோடி இழப்பு என்று உற்பத்தியாளர்கள் வேதனை
இறால் தொழிலில் நேரடியாக 20 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 30 லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். வேலை இழக்கும் அபாயத்தால் 50 லட்சம் தொழிலாளர்கள் கவலை

500 டன் கடல் உணவுகள் விரயம்:
அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாக இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட 500 டன் கடல் உணவுகளை அமெரிக்க வர்த்தகர்கள் வாங்க மறுத்ததால் 60 கண்டெய்னர்களில் கப்பலில் கொண்டு செல்லப்பட்ட கடல் உணவுகள் நடுக்கடலில் பாதி வழியில் தூத்துக்குடிக்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ள அவலம்
இதனால் 500 டன் கடல் உணவுகள் விரயம்

ரூ.2000 கோடி தோல் பொருட்கள் தேக்கம்:
இந்தியாவின் மொத்த தோல் ஏற்றுமதியில் தமிழ்நாட்டில் 40% தோல் ஏற்றுமதி நடக்கிறது
50% வரியால் அமெரிக்காவில் இந்திய தோல் பொருட்களுக்கு 2 மடங்கு விலை உயர்ந்ததால் விற்பனை மந்தம்
இதனால் தோல் தயாரிப்பின் முக்கிய மையங்களான ராணிப்பேட்டை, ஆம்பூர், வேலூர் நகரங்களில் உள்ள நிறுவனங்களில் ரூ.2000 கோடி பொருட்கள் தேக்கம்
உற்பத்தி பாதிப்பால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்