இது மோடியின் 3.0 வா? இல்லை, 2.1ஆ என்று கேட்கும் படியாகத்தான் உள்ளது மோடியின் 3.0 அமைச்சரவை. கூட்டணிக்கட்சி எம்பிக்களை தவிர கடந்த 2.0 மோடி அமைச்சரவையில் இருந்தவர்களே இந்த அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளனர். கடந்த அமைச்சரவையில் வகித்த பொறுப்புகளையே இந்த அமைச்சரவையிலும் வகித்து வருகின்றனர்.
- மோடியின் இந்த 3.0 அமைச்சரவையில் 31 வயது முதல் 80 வயது வரை உள்ளனர். இதில் 66% அதாவது 47 அமைச்சர்கள் 51 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள்.
- 15% அமைச்சர்கள் அதாவது 11 அமைச்சர்கள் 12ம் வகுப்பு வரை மட்டுமே முடித்துள்ளனர். 80% பேர் அதாவது 57 பேர் பட்டதாரிகள். 3 அமைச்சர்கள் டிப்ளமோ படித்துள்ளனர்.
- மோடி 3.0 அமைச்சரவையின் இளம் உறுப்பினர் ராம் மோகன் நாயுடு. ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மக்களவை தொகுதியில் இருந்து 3வது முறையாக வென்ற தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவர் தனது 36 வயதில் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக உள்ளார்.
குற்றவழக்குகள் உள்ள அமைச்சர்கள்:
- மோடியின் 3.0 அமைச்சரவையில் உள்ள 71 அமைச்சர்களில் 39% பேர் மீது அதாவது 28 பேர் மீது கிரினிமல் வழக்குகள் உள்ளன. இதில் 19 அமைச்சர்கள் மீது அதாவது 27% அமைச்சர்கள் மீது கொலை முயற்சி மற்றும் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர், கல்வி மற்றும் வடகிழக்கு மாநில மேம்பாட்டு துறை இணை அமைச்சர் சுகந்தா மஹூம்தான் மீது இந்திய தண்டனை சட்டம் 307ன் கீழ் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
- 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன.
கோடீஸ்வர அமைச்சர்கள்:
- 71 அமைச்சர்களில் 99% , அதாவது 70 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள்.
- கோடீஸ்வர அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.107.94 கோடி. 6 அமைச்சர்கள் தங்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.
- ராம் மோகன் நாயுடு தனது தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் குடும்ப சொத்து மதிப்பு ரூ.5,785 கோடிக்கு மேல் என்று தெரிவித்து பலரையும் வாய்பிளக்க வைத்தார்.
மோடி 3.0 அமைச்சரவையில் உள்ள 11 கூட்டணிக்கட்சி எம்பிக்கள் – முழு விபரம்: