
எனக்காக மண்டியிட்டு மனு கொடுக்கும் மாதர் சங்கங்கள் ரிதன்யா என்ற தங்கை வரதட்சனை கொடுமை, பாலியல் துன்புறுத்தலில் தற்கொலை செய்ததற்கு எங்கே போனது? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இதற்கு மார்க்சிஸ்ட் தமிழ்மாநில செயலாளர் சண்முகம் பதிலடி கொடுத்திருக்கிறார். அதில், ‘’கிணற்றுக்குள் இருக்கும் தவளை உலகம் இவ்வளவுதான் என்று கருதிக் கொள்ளுமாம். அதுபோல் சீமான் எனும் தவளை தன்னைத் தவிர தமிழ்நாட்டில் யாருமே போராடுவதில்லை என்று பிதற்றிக் கொண்டு திரிகிறது. ரிதன்யாவுக்காக மாதர் சங்கம் எழுப்பிய குரல் கிணற்றுக்குள் இருந்த சீமான் தவளைக்கு கேட்காமல் போயிருக்கலாம்’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.