விஜயராஜ் அழகர்சாமியாக பிறந்த கேப்டன் விஜயகாந்த், தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராகவும் தமிழ்நாடு அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்தார்.
“விஜயகாந்த்தின் வாழ்க்கை வரலாறு“
- பிறப்பு: ஆகஸ்ட் 25, 1952ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்தார்
- திரைப்பட அறிமுகம்: 1979ல் “இனிக்கும் இளமை” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்
- திரைப்பட வாழ்க்கை: 1980-கள் மற்றும் 1990-களில் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராகத் திகழ்ந்தார், பல திரைப்படங்களில் ராணுவ அதிகாரியாக நடித்ததன் மூலம் “கேப்டன்” என்ற புனைப்பெயரைப் பெற்றார்.
- அரசியல் பிரவேசம்: விஜயகாந்த் 2005 இல் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) கட்சியை நிறுவி அரசியலில் நுழைந்தார்.
- தேர்தல் அறிமுகம்: 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தேமுதிக தமிழ்நாட்டின் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது
- சட்டமன்ற உறுப்பினர்: 2006-ல் விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேமுதிக 8.38% வாக்குகளை பெற்று 3வது பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்தது
- 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: 2011 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக தமிழ்நாட்டின் பிரதான கட்சியான அதிமுக உடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது
- எதிர்கட்சித் தலைவர்: 2011ல் 28 இடங்களில் வெற்றி பெற்ற தேமுதிக அதிமுக உடன் ஏற்பட்ட முரண்பாடுகளால், எதிர்கட்சியாக செயல்பட்டது. 2016 வரை விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவராக இருந்தார்.
- 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: தேமுதிக தலைமையில் ‘மக்கள் நலக் கூட்டணி’ அமைத்துப் போட்டியிட முடிவு செய்த விஜயகாந்த், தேர்தலில் எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது.
- மருத்துவ பிரச்னைகள்: சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொண்ட விஜயகாந்த், 2016க்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கினார்.
- 2019 லோக்சபா தேர்தல்: 2019 இந்திய பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்தது, ஆனால் எந்த இடங்களிலும் வெற்றிபெறவில்லை
- தனிப்பட்ட வாழ்க்கை: விஜயகாந்த் 1990 ஆம் ஆண்டில் பிரேமலதா அவர்களை மணந்தார்; அவர்களுக்கு விஜய் பிரபாகர் மற்றும் சண்முக பாண்டியன் என்கிற இரு மகன்கள் உள்ளனர்.
- திரைப்படத் தயாரிப்பு: நடிப்பு மற்றும் அரசியலைத் தவிர, விஜயகாந்த் தனது நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் மூலம் திரைப்படத் தயாரிப்பிலும் இறங்கினார்.
- தாக்கம்: திரைப்படத் துறை மற்றும் அரசியல் ஆகிய இரண்டிற்கும் விஜயகாந்தின் பங்களிப்புகள் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
- மறைவு: உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் டிசம்பர் 18, 2023-ல் பிரியா விடைபெற்றார்.