
ஆட்சியைப் பிடித்துவிடலம் என்ற கனவில் இருக்கும் சீமானுக்கு ரஜினி அரசியல் வருகை கடும் அச்சத்தை ஏற்படுத்தியதன் விளைவுதான், தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளணும். ரஜினி நடிக்கட்டும், சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுவோம். ஆனால், ஆட்சியை பிடிக்க விடமாட்டோம் என்று பகிரங்கமாகவே எச்சரித்தார்.
அதே கமல்ஹாசன் கட்சி தொடங்கியபோது எதுவும் பேசமாமல் அமைதியாக இருந்தார் சீமான். அடுத்து விஜய் கட்சி தொடங்க முற்பட்டபோது, அவருடன் இணைந்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று அவருடன் காரில் அடிக்கடி பயணம் சென்று பலவும் சொல்லி அவரை தன் பக்கம் இழுக்கப் பார்த்தார்.
ஆனால் விஜயோ, சீமானின் கொள்கைகளுக்கு எதிராகவே தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கைப்பாதையை வகுத்து சீமான் தன்னுடன் இணைந்து பயணிக்க இயலாதபடி செய்துவிட்டார்.

இந்த ஆத்திரத்தில்தான் சீமான், அண்மையில் ரஜினியை அவரது வீட்டில் சென்று சந்தித்ததாக தகவல் பரவியது. கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியான வேட்டையன் படம் குறித்து சீமான் பேட்டி அளித்திருந்ததும், அப்படம் குறித்து மூன்று பக்க பாராட்டு மடலையும் பார்த்துவிட்டுத்தான் சீமானை அழைத்து நன்றி தெரிவித்தார் ரஜினி என்று சீமான் தரப்பில் இருந்து தகவல் பரவியது.
கடந்த நவம்பர் 21ம் தேதி நடந்த அந்த சந்திப்பில், 2 மணி நேரத்திற்கும் மேலாக ரஜினியும் சீமானும் பேசிக்கொண்டனர். அதில் ரவீந்திரன் துரைசாமி தவிர்த்து சீமானும் ரஜினியும் மட்டும் 45 நிமிடங்கள் பேசி இருக்கிறார்கள்.
’’இது அன்புநிமித்தமான சந்திப்பு’’ என்று சீமான் கூறியிருந்தார்.
ரஜினியின் சந்திப்பு குறித்து பெருந்தன்மையாகவே பேசி வந்தார் சீமான். அதனால் ரஜினி மீதான அவரின் தனிப்பட்ட வெறுப்பு தீர்ந்தது என்ற பேச்சு இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ரஜினி மீது பாய்ந்து குதறியிருக்கிறார் சீமான்.
துப்புரவு பணியாளர்கள் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, ‘’அந்த கூலியும் காலி இந்தக் கூலியும் காலி’’ என்று பதிலளித்துள்ளார்.

கூலி படத்தை ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்கள் அனைவருமே நல்லாயிருக்கு என்று சொல்லி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் மட்டுமே எதிரான விமர்சனத்தை பரப்பி வருகின்றனர். இதையே விஜயின் அண்ணன் என்று சொல்லிக்கொள்ளும் சீமானும் செய்திருப்பதால், மீண்டும் ரஜினி மீது வன்மத்தை கக்குவதால், ‘பச்சோந்தி சீமான்’ என்று சமூகவலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.