பிரபல சின்னத்திரை நடிகை மான்யா ஆனந்த். ‘வானத்தைப் போல’, ‘மருமகள்’, ‘அன்னம்’ உள்ளிட்ட சீரியல்கள் பிரபலம் ஆனவர். இவர் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையாகி அது வைரலாகி வருகிறது.
தனுஷ் மேனேஜர் ஸ்ரேயாஸ் தன்னுடன் போனில் பேசியதாகவும், தனுஷுடன் நடிக்க வாய்ப்பு தருவதாகச் சொல்லி, அதற்காக தனுஷுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டதாகவும் மான்யா சொன்னது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தீயாக பரவி பற்றி எரியும் நிலையில், ’’தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் என்று ஒருவர் என்னிடம் பேசினார். அவர் தனுஷுன் மேனேஜர்தான் என்று திட்டவட்டமாக நான் சொல்லவில்லை. அவர் போலியான நபராக இருக்கலாம் என்றுதான் சொல்லி இருந்தேன். அதனால் நான் ஸ்ரேயாஸ் என்று திட்டவட்டமாக சொன்னதாக செய்திகள் பரப்ப வேண்டாம்’’ என்று விளக்கமளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் படத்தில் நடிக்க நடிகைகள் தேவை என்று சொல்லி தனிஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் விளம்பரம் செய்திருந்தாக ஒரு விளம்பரம் வெளியாகி, அந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்களுக்கு பலரும் தொடர்பு கொண்டு பேசி சர்ச்சை ஆனது. பல நடிகைகளுக்கு ஸ்ரேயாஸ் பேசுவதாகச் சொல்லி பேசிய நபர், ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்பேசவும் நடிகைகள் உஷாராகி இது போலியான நபர் என்று ஒதுங்கிக்கொண்டனர். தொடர்ந்து இப்படியான சலசலப்புகள் வந்ததால் தனக்கும் இந்த சர்ச்சைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி அறிக்கை வெளியிட்டார்.
https://twitter.com/i/status/1991119556493164544
இந்நிலையில் தற்போது மீண்டும் இப்படி ஒரு பிரச்சனை எழுந்ததும் தனுஷும் ஸ்ரேயாசும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது தொடர்பாக அவர் தீவிரமாக விசாரித்தபோது, தங்கள் பெயரைச்சொல்லி நடிகைகளிடம் பேசியது கேரளாவைச் சேர்ந்த நபர் என்பது தெரியவந்திருக்கிறது.

கேரளாவில் இருந்து வார கடைசி நாளில் சென்னைக்கு வந்து இது மாதிரி நடிகைகளிடம் பேசி, ஏமாறும் நடிகைகளிடம் காரியத்தை சாதித்துக்கொண்டு செல்வதை வழக்கமாக வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது.
சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அந்த நபர் விரைவில் கைதாக வாய்ப்பிருக்கிறது என்கிறது தனுஷ் வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்.
