
அ.தி.மு.க. மூத்த தலைவர் செங்கோட்டையன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுவெளியில் வைத்த நிபந்தனை
*அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று 6 முன்னாள் அமைச்சர்கள் சென்று பொதுச்செயலாளரிடம் கோரிக்கை வைத்தோம். அதை அவர் ஏற்கவில்லை
*தொண்டர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்ற வகையில் இப்போது கட்சியில் இருந்து பிரிந்தவர்களை 10 நாட்களுக்குள் இணைக்க வேண்டும்

*இந்த காலக்கெடுவுக்குள் இணைக்காவிட்டால் என் மனநிலையில் உள்ளவர்களுடன் இணைந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்
*இந்த விசயத்தில் பழனிசாமி மனநிலை பற்றி எனக்குத் தெரியாது; என் மனநிலையைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறேன்
*இந்த கோரிக்கையை பரிசீலிக்காவிட்டால் பொதுச்செயலாளரின் பரப்புரையில் பங்கேற்க மாட்டேன்