
தனிப்பட்ட முறையில் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று எவ்வளவோ பேசிப்பார்த்தும் ஒரு பிரயோசனமும் இல்லாததால், 10 நாட்களுக்குள் அவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார் செங்கோட்டையன். இதனால் செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகளை பறித்தார் பழனிசாமி.
இதில் அதிருப்தி அடைந்திருந்த நிலையில் செங்கோட்டையனை டெல்லி அழைத்து பேசி இருக்கிறார்கள் அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும்.
டெல்லியில் அவர் என்ன பேசினார்? அவரிடம் என்ன பேசினார்கள்? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. செங்கோட்டையனை அடுத்து, அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரையும் தானும் அமித்ஷாவை சந்தித்ததாக சொல்லி இருக்கிறார்.

ஆனால் அமித்ஷாவிடம் என்ன பேசினார் செங்கோட்டையன் என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி இருகிறார்.
பாஜக தலைமையிடம் பஞ்சாயத்துக்கு போவதால் அ திமுகவின் நிலை குறித்து அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி மருது அழகுராஜ், அதிமுக தலைவர்களுக்கு குலதெய்வம் ஸ்ரீராமராகவும், அதிமுகவின் தலைமைக் கழகம் அமித்ஷாவின் இல்லமாகவும், மொத்தத்தில் விஷ்வஹிந்து பரிஷத் இந்து முன்னனி போன்ற பாஜகவின் துணை அமைப்புகளுள் ஒன்றாக அதிமுக மாறியிருக்கிறது.
அதிமுகவை தோற்றுவித்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட போது அவர் முதன் முதலில் ஏற்றியது தாமரைக் கொடி .
இப்போது முதலும் முடிவுமாக அந்த தாமரைக் கொடியையே தங்களுக்கான கொடியாக ஏற்கும் அளவுக்கு அதிமுக தலைவர்களை பாஜக ’’என்கிறார்.