
அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கி கட்சியை கபளீகரம் செய்ய நினைத்தார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக ஆட்சியை கவிழ்க்க 18 எம்.எல்.ஏக்களை கடத்திச்சென்றார் டிடிவி தினகரன். அதனால் இவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது. அன்றைக்கு இவர்களிடம் இருந்து அதிமுகவை பாஜகதான் காப்பாற்றியது. அதனால் பாஜகவுக்கு நன்றி மறவாமல் இருக்கிறோம்.
சில பேரை கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர். அந்த கைக்கூலி யார் என்பதை அடையாளம் காட்டிவிட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்று கூறி இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்துள்ள விளக்கம்:

*பாஜகவுக்கு நன்றியோடு இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு செங்கோட்டையனை தாக்குகிறார். அவரை கைக்கூலி என்கிறார் பழனிசாமி. அவர் யாருடையை கைக்கூலி? டிடிவி தினகரனோட கைக்கூலியா? ஓபிஎஸ்சின் கைக்கூலியா?
*செங்கோட்டையன் யாரை சந்திக்கிறார்? டெல்லி சென்றுவிட்டு யாரை எல்லாம் சந்தித்துவிட்டு வந்தார் என்பது தெரிந்தும் பழனிசாமி முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். தோல்வி பயத்தில் உளறுகிறார்
*உறுதியாக வரும் சட்டமன்ற தேர்தலில் பழனிசாமி தோற்கடிக்கப்படுவார்