
குறுகிய காலத்திலேயே டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், பிரதர் என்று நடித்து தமிழில் முன்னணி நடிகையானார் பிரியங்கா மோகன். தற்போது பென்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாணின் ஓஜி படத்திலும் நடித்துள்ளார்.
பிரியங்கா மோகனுக்கு முதலில் The Route என்ற நிறுவனம் பி.ஆர். வேலைகளைச் செய்து வந்துள்ளது. இது நடிகர் விஜயின் பி.ஆர். நிறுவனம் ஆகும். கடந்த 2010ல் ஜெகதீஸ் என்பவரால் தொடங்கப்பட்டு விஜய்க்கு பி.ஆர். வேலைகளைச் செய்து வந்த இந்த நிறுவனம், திரையுலகில் பல நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்களுக்கு பி.ஆர். வேலை செய்து அவர்களை பிரபலப்படுத்தியது.

பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பிரபல நடிகைகளுக்கு The Route நிறுவனம்தான் பி.ஆர். வேலைகள் செய்து வந்தது.
இந்த பி.ஆர். நிறுவனத்தில் இருந்து வெளியேறும் பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் ரூட் நிறுவனத்தினர் என்கிற குற்றச்சாட்டு உள்ளது.
நடிகை பிரியங்கா மோகன் ரூட் நிறுவனத்தில் இருந்து வெளியேறி வேறு ஒரு நிறுவனத்திற்கு மாறியதால் பிரியங்கா மோகன் பற்றி தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களை The Route நிறுவனம் பரப்பி வந்ததாக கடந்தாண்டில் தகவல் பரவி வந்தது.
விஜய் சொல்லித்தான் அவரது பி.ஆர்.ஓ. ஜெகதீஷ், தனது நிறுவனம் மூலமாக பிரியங்கா மோகன் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை செய்து வந்ததாகவும் தகவல் பரவியது. பிரியங்கா மோகனுக்கு டான்ஸ் ஆட தெரியவில்லை. பிரியங்கா மோகன் அழகாக இல்லை என்றெல்லாம் பரப்பி வந்தனர்.
இது பற்றி பிரியங்கா மோகன் வெளிப்படையாக எதுவும் குற்றச்சாட்டு சுமத்தவில்லை. அதன்பிறகு இந்த பிரச்சனை ஓய்ந்திருந்தது. தற்போது மீண்டும் இவ்விவகாரம் எழுந்திருக்கிறது.

ஓஜி படம் வரும் 25ம் தேதி ரிலீசாகவிருக்கும் நிலையில் பிரியங்கா மோகனை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பரப்பி வருகிறார்கள்.
இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘’காசு கொடுத்து என்னை கலாய்க்கச் சொல்கிறார்கள். எனக்கு பிடிக்காதவர்கள் என்னை டார்கெட் செய்யச்சொல்லி ட்ரோல் செய்பவர்களுக்கு காசு கொடுக்கிறார்கள். இதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. இதனால் நான் உடைந்து போகமாட்டேன்’’ என்று கூறியிருக்கிறார்.
காசு கொடுத்து யார் இதை செய்யச் சொல்வது? என்று பிரியங்கா மோகன் சொல்லவில்லை என்றாலும், அது விஜய்யின் The Route நிறுவனம்தான் என்று வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.