வியட்நாம் நாட்டைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான VinFast, அதன் முதல் இந்திய உற்பத்தி ஆலையை, தென் மாநிலமான தமிழ்நாட்டில் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆலையை தூத்துக்குடி நகரத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள VinFast நிறுவனம், அங்கு மின் வாகனங்ளுக்கான பேட்டரிகளை தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் TESLA மற்றும் சீனாவின் BYD போன்ற கார் தயாரிப்பாளர்களுடன் போட்டியிடும் VinFast, உலகளவில் மின்சார வாகன தயாரிப்புகளில் முதன்மை நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்கிறது.
தூத்துக்குடியில் அமைய உள்ள இந்த புதிய ஆலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ( #TNGIM2024 ) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
File Pic
இந்த விவகாரத்தில் நேரடியாக தொடர்புடைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு சமீபத்தில் பல VinFast நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வருகை தந்ததாக கூறியுள்ளார்.
VinFast நிறுவனம் கடந்தாண்டு செப்டம்பர் முதல் இந்தியாவில் பல்வேறு வேலைகளுக்கு திறமையானவர்களை பணியமர்த்தத் தொடங்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் மின் வாகன Assembly தொழிற்சாலைகளை அமைக்க உள்ளதாக கடந்த அக்டோபர் மாதம் VinFast நிறுவனம் கூறியிருந்தது. அவை தொடக்கத்தில் $200 மில்லியன் வரை மூலதனச் செலவீனங்களுடன் ஆண்டுக்கு 50,000 கார்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
File Pic
உலகின் மூன்றாவது பெரிய வாகன நிறுவனமான VinFast தனது கிளை நிறுவனங்களான Green SM மற்றும் EV TAXI Operator நிறுவனங்களின் செயல்பாடுகளையும் இந்தியாவில் நிறுவ திட்டமிட்டுள்ளது.
“Detroit of Asia” என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மற்றும் பிற மாவட்டங்களில், ஏற்கனவே இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளர்களான Ola Electric, Ather, சீனாவின் BYD உள்ளிட்ட பல மின் வாகன நிறுவனங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.