ஊடகத் தகவல்களின்படி, இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை ஏற்றி வந்தப் பல ரஷ்ய கப்பல்கள் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்தியாவை விட்டு கிழக்கு நோக்கி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டணம் செலுத்தும் முறையில் ஒருமித்த கருத்து இல்லாததால், இந்தியா மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளது.
கப்பல் கண்காணிப்பு தரவுகளின்படி, NS கமாண்டர், Sakhalin Island, Krymsk, Nellis, and Liteyny Prospect ஆகிய 5 கப்பல்கள் கிழக்கு ரஷியாவில் இருந்து இந்தியா நோக்கி Sokol-கச்சா எண்ணெயை ஏற்றி வந்துள்ளன.
இதற்கிடையில், Sokol-கச்சா எண்ணெயை ஏற்றி வந்த NS Century என்கிறப் கப்பல், இன்னும் இலங்கை கடற்கரைக்கு அருகிலேயே நிலைக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sokol-கச்சா எண்ணெய் சரக்குகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு (IOC) ரஷ்யா வழங்குவதாக இருந்தது. ஆனால் பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்தியாவைச் சுற்றி ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த கப்பல்கள் இப்போது இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாகக் கூறும் சில செய்தி அறிக்கைகள், Sokol-கச்சா எண்ணெய் சரக்குகளை வாங்கிக்கொள்ள சீனா முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடாக இந்தியா மாறியது. சவூதி அரேபியா மற்றும் ஈராக்கை முந்தி, இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையராக ரஷ்யா உருவெடுத்தது.
இருப்பினும், கடந்த 2023 டிசம்பர் மாதம் ரஷ்யாவிலிருந்து இந்திய இறக்குமதிகள் 16%-22% சரிவைக் கண்டன. கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட நாணய பரிமாற்ற முடிவுகளில் இரு நாடுகளும் உடன்படவில்லை.
வர்த்தக ஏற்றத்தாழ்வு காரணமாக இந்தியாவும் ரஷ்யாவும் எண்ணெய் கொடுப்பனவுகளுக்கு ரூபாயைப் பயன்படுத்துவதில் உடன்படவில்லை. மேலும், ரஷ்யா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதை விட அதிகமாக ஏற்றுமதி செய்கிறது.
சீனாவின் யுவான், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் DIRHAM உள்ளிட்ட நாணயங்களில் வர்த்தகம் செய்ய எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வி அடைந்ததால், மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளிடம் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிக்கப்படுத்தியுள்ளது.