
அதிமுக பாஜகவுக்கு இடையில் நின்று பேச்சுவார்த்தை நடத்தி அக்கட்சிகளை ஒருங்கிணைத்த ஆடிட்டர் குருமூர்த்தியே, இப்போது பாஜக, அதிமுக கூட்டணியில் தவெகவை கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
தவெகவில் அடுத்தக்கட்ட தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த குருமூர்த்தி, கரூர் சம்பவத்திற்கு பின்னர் நேரடியாக விஜயிடமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். எடுத்த எடுப்பிலேயே விஜய் 100 சீட் கேட்க ஆடிப்போயிருக்கிறார் குரு. கேட்டதோடு அல்லாமல் அதிலேயே பிடிவாதமாகவும் இருக்கிறாராம் விஜய்.

எடப்பாடி 150ல் பிடிவாதமாக இருக்கிறார். விஜய் 100ல் பிடிவாதமாக இருக்கிறார். இத்தனை சீட் சாத்தியமில்லையே. இவர்கள் இப்படி பிடிவாதமாக இருந்தால் பாஜகவுக்கு எப்படி சீட் எடுத்துக்கொள்வது, மற்ற கட்சியினருக்கு எப்படி சீட் ஒதுக்குவது? என்ற குழப்பத்தை டெல்லி மேலிடத்திற்கு சொல்லி இருக்கிறாராம் குரு.
எடப்பாடியிடமும் இதைச் சொல்ல, கரூர் சம்பவத்திற்கு முன்பு இருந்த நிலைமை வேறு. அப்போது இதையேதான் சொன்னார் விஜய். இப்போது இருக்கும் நிலைமையில் நாம் சொல்லுவதை கேட்டுக்கொள்ளுவார் என்று சமாதானம் சொல்லி இருக்கிறார்.

குருவின் பேச்சுவார்த்தை ஒருபக்கம் இருக்க, அவரது பேச்சுவார்த்தை முழுவதும் பாஜகவுக்கு சாதகம் செய்யும் நோக்கில் இருக்க, அதிமுகவுக்கு சாதகம் செய்யும் நோக்கில் இருக்கிறதாம் ஜெகதீஷின் பேச்சுவார்த்தை. விஜயின் தனிப்பட்ட உதவியாளர்தான் ஜெகதீஷ். ரொம்ப காலமாகவே எடப்பாடி பழனிசாமி தொடங்கி மாஜி அதிமுக அமைச்சர்கள் பலரின் பணத்தை வாங்கி சினிமாவில் பைனான்ஸ் செய்து வருகிறாரம் ஜெகதீஷ். இவரின் மூலமாகத்தான் விஜயிடம் காய் நகர்த்தி வருகிறாராம் எடப்பாடி.