கடந்த சில வாரங்களாக தங்க விலை ஒருநாளில் உயர்வு, அடுத்த நாளில் சரிவு என்று பெரிய மாற்றங்களை சந்தித்தது. இதனால் தங்கம் வாங்குபவர்கள், சேமிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். தங்க விலை ஏன் உயர்கிறது? எது வாங்க நல்லது? எவ்வாறு நடுத்தரவர்க்கம் பாதிக்கப்படுகிறார்கள்? 24K/22K/18K/9K Gold தங்கம் என்ன வேறுபாடு? என்பதை இங்கு பார்க்கலாம்:

தங்க விலை உயர்வதற்கான முக்கிய காரணங்கள்
உலக பொருளாதார நெருக்கடி போர், ஜியோபாலிட்டிக்ஸ், வர்த்தக சிக்கல்கள் போன்ற காரணங்களால் மக்கள் பாதுகாப்பான சொத்தாக தங்கத்தை அதிகம் வாங்குகிறார்கள். ரூபாய் மதிப்பு குறைவால் இந்தியா தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்கிறது.மத்திய வங்கிகள் & பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தை சேமித்து வைத்துக்கொள்கிறார்கள். இதனால் சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கிறது.
பெரிய லாபத்துக்குப் பிறகு சிலர் விற்பனை செய்வது. இதனால் சில நாட்களில் தங்கம் திடீரெனக் குறைந்து, பிறகு மீண்டும் உயரும். பண்டிகை கால தேவைகள் தசரா, தீபாவளி, திருமண சீசன் — இந்த நேரங்களில் கோரிக்கை அதிகமாதலால் விலை கூடுகிறது.
தங்கத்தின் வரலாறு 1934 முதல் 2025 வரை:
வரலாற்று ரீதியாக, தங்க எதிர்கால விலை நிலையற்றதாகவே இருந்து வருகிறது, குறிப்பாக பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்யப்படும்போது.
ஏப்ரல் 1934 முதல் ஜூலை 1970 வரை: நீடித்த சரிவின் போது தங்கம் 65% க்கும் அதிகமாகக் குறைந்தது.
ஜூலை 1970 முதல் ஜனவரி 1980 வரை: தங்கம் கிட்டத்தட்ட 850% உயர்ந்து கூர்மையான ஏற்றத்தை அடைந்தது.
ஜனவரி 1980 முதல் பிப்ரவரி 2001 வரை: தங்கம் 82% சரிந்தது.
பிப்ரவரி 2001 முதல் செப்டம்பர் 2025 வரை: தங்கம் 591% அதிகரித்துள்ளது .
நடுத்தர வர்க்க மக்கள் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள்?
திருமணம், விழா போன்றவற்றுக்கு தங்கம் கட்டாயம் போன்றதால், செலவு அதிகரிக்கிறது
சேமிப்புக்கான தங்கம் வாங்கச் சிரமம் அதிகரிக்கிறது. EMI/கடன் அடிப்படையில் தங்கம் வாங்க வேண்டிய நிலை. அவ்வகையில், தங்க விலை உயர்வு மத்திய வர்க்க குடும்பத்தின் பொருளாதாரத்தை நேரடியாக எண்ணிக்கையில் தாக்குகிறது.

புதிய ஹால்மார்க் 9K ஏன் அறிமுகம்?
தங்கத்தின் விலை அதிகரித்ததால், சாதாரண மக்கள் வாங்க முடியாத நிலை.
அதனால்தான், 9 காரட் தங்கத்திற்கும் ஹால்மார்க் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மலிவு விலையில் நகை வாங்க முடியும். ஆனால் தங்க மதிப்பு குறைந்ததால் மறுவிற்பனை விலை குறைந்து கிடைக்கும்தங்கத்தின் விலை உயர்வால், இனி வரும் காலங்களில் மக்கள் குறைந்த காரட் தங்கம் வாங்குவது தவிர்க்க முடியாத நிலை ஏற்படலாம். நமது ஊரில் நாம் 22 காரட் தங்கம்தான் வாங்குவோம். ஆனால், தற்போது 18 காரட் தங்கமே கிட்டத்தட்ட ரூ.10,000-ஐ எட்டிவிட்டது. இப்போது 9 காரட் தங்கத்திற்குக் கூட ஹால்மார்க் கொடுக்கப் போகிறார்கள், என நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக, ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் 9 காரட் தங்கம் விரைவில் மிகவும் பிரபலமாக மாறிவிடும். 22 மற்றும் 24 காரட் தங்கம் என்பது இனி பணக்காரர்களுக்கே உரியதாக மாறக்கூடும். மேலும், கடந்த 11 ஆண்டுகளில் ரூபாய் மதிப்பு ரூ.56-லிருந்து ரூ.89 வரை உயர்ந்தது தங்க விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம்.

இனி தங்கம் வாங்கலாமா? சரியான ஆலோசனை
நீண்டகால சேமிப்புக்கு சிறிதுசிறிதாக வாங்கலாம். ஒரே நேரத்தில் அதிகமாக வாங்க வேண்டாம்
பட்ஜெட்டுக்குள் வேண்டுமானால் 9K தங்க நகை வாங்கலாம். ஆனால் hallmark உள்ள நகைகள் மட்டுமே வாங்க வேண்டும்.
முதலீடு நோக்கில்:
Sovereign Gold Bonds( SGB) தங்கப் பத்திரங்கள்
Gold ETF
திருமண நகைகள் 18k அல்லது 9K வாங்க வேண்டாம். ஏனெனில், இதன் மறுவிற்பனை மதிப்பு குறைவு (resale value )
தங்கம் இன்னும் பாதுகாப்பான முதலீடு தான்; ஆனால் நிதி திட்டமிடாமல் வாங்கினால் சிக்கல். நடுத்தரவர்க்கம் தங்கத்தை விட, கல்வி, நிலம், ஓய்வூதிய முதலீடு போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.
