செம்பருத்தி படம் மூலம் 1992ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. முதல் படமே படு ஹிட் அடித்ததால் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தன்னை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணியையே காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
2015 ம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார். புலன் விசாரணை -2, ரோஜாவின் கில்லாடி படங்களை அடுத்து என் வழி தனி வழி படத்தில் நடித்தார். அதன் பின்னர் முழு நேர அரசியலுக்கு போய்விட்டார் ரோஜா.

தனது பூர்வீகமான ஆந்திராவின் நகரி தொகுதியில் 2014ம் ஆண்டில் எம்.எல்.ஏ. ஆன ரோஜா, ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் அமைச்சர் ஆனார். ஆட்டி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாயுடு ஆட்சி வந்த பின்னர், அரசிலில் இருந்து கொஞ்சம் விலகி 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் நுழைந்திருக்கிறார்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் லெனின் பாண்டியன் படத்தில் நடிக்கிறார். கிழக்குச் சீமையிலே பட ராதிகா மாதிரி, லெனின் பாண்டியன் படத்தில் நடித்து வருகிறார் ’சந்தானம்’ என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார் ரோஜா. இசையமைப்பாளர் கங்கை அமரன் இப்படத்தில் முக்கியக் கேரக்டர்களில் நடிக்கிறார்.
