ஐரோப்பாவில் டிஜிட்டல் மார்க்கெட்ஸ் ஆக்ட் (DMA) அமல்படுத்தப்பட்டபின், அதனை பின்பற்றும் வகையில் WhatsApp தனது முக்கியமான மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டு வரத் துவங்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய மெசேசிங் ப்ளாட்ஃபாரங்களில் ஒன்றான WhatsApp, இப்போது தனது செயலியில் மூன்றாம் தரப்பு மெசேஜிங் சேவைகளை இணைக்கும் பெரிய பரிமாற்றத்தை தொடங்கியுள்ளது. மெட்டா நிறுவனம் இதனை “வரும் மாதங்களில்” படிப்படியாக அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த மாற்றத்தால், வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள் WhatsApp-க்கு வெளியே உள்ள மற்ற மெசேஜிங் ஆப்களில் இருந்தும் நேரடியாக செய்திகளைப் பெற முடியும். ஆனால், இது தொடக்கத்தில் ஐரோப்பாவின் DMA விதிகளால் பாதுகாக்கப்படும் நாடுகளைச் சேர்ந்த பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

BirdyChat மற்றும் Haiket: வாட்ஸ்அப்புடன் இணையும் முதல் மூன்றாம் தரப்பு ஆப்கள்
மெட்டா தெரிவித்ததின்படி, BirdyChat மற்றும் Haiket எனப்படும் இரண்டு ஆப்கள் முதலாவதாக WhatsApp உடன் பரிமாற்றம் செய்யும் திறனைக் கொண்டதாக இருக்கும். இந்த இரு நிறுவனங்களும் பெரும்பாலான பயனாளர்களுக்கு புதியவையாக இருந்தாலும், DMA விதிகளின் நோக்கமான “போட்டி சமநிலை” உருவாக்கும் பணியில் இது மிகப் பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இதன் மூலம் பெரிய நிறுவனங்கள் (WhatsApp போன்றவை) மட்டுமே இல்லை, சிறு மெசேஜிங் ஆப்களுக்கும் சமமான சந்தை வாய்ப்பு கிடைக்கிறது.
என்டு-எண்ட் என்கிரிப்ஷன்(End to End Encryption) தொடரும் எனும் நம் பாதுகாப்பு இந்த மாற்றத்தால் பாதிக்கப்படாது.
மேட்டா நிறுவனம் தெளிவாக கூறியுள்ள விஷயங்களில் ஒன்று:
- “மூன்றாம் தரப்பு மெசேஜிங் ஆப்களும், வாட்ஸ்அப்புக்கு இணையாக ஒரே நிலை end-to-end encryption (E2EE) தரத்தைப் பயன்படுத்த வேண்டும்.”
- அதாவது, யார் WhatsApp பயனருக்கு மெசேஜ் அனுப்பினாலும், அவர்கள் பயன்படுத்தும் ஆப் அந்த பாதுகாப்பு அளவை பின்பற்ற வேண்டியது கட்டாயம்.
- WhatsApp போலவே, மெசேஜ்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டதால், Meta உட்பட எந்த நிறுவனத்துக்கும் அந்த செய்திகளைப் படிக்க முடியாது.

இந்த இணைப்பின் மூலம் பெறப்படும் உள்ளடக்கம்:
உரை (Text), புகைப்படங்கள், வீடியோக்கள், குரல் செய்தி, ஆவணங்கள் என இவை அனைத்தும் என்கிரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படும்.
ஆனால் இவை iOS மற்றும் Android மொபைல் ஆப்களில் மட்டுமே செயல்படும். WhatsApp Web, Desktop App, Tablet App ஆகியவற்றில் இது கிடையாது.
பயனாளர்கள் எவ்வாறு Opt-in செய்வார்கள்?
இந்த வசதி தானாக எல்லோருக்கும் செயல்படாது. பயனர் விரும்பினால் மட்டுமே “opt-in” செய்ய வேண்டும்.
WhatsApp Settings பகுதியில் விரைவில் ஒரு புதிய அறிவிப்பு தோன்றும். அதை கிளிக் செய்தால்,
- மூன்றாம் தரப்பு ஆப்களில் இருந்து மெசேஜ் பெற விரும்புகிறீர்களா?
- தனி Folder-ஆக வைக்க வேண்டுமா?
- அல்லது சாதாரண WhatsApp inbox-இல் சேர்க்க வேண்டுமா? என்ற விருப்பங்களை பயனர் தேர்வு செய்யலாம்.
இதன் மூலம், பயனர் தனியுரிமை மீதான கட்டுப்பாட்டை இழக்காமல், விருப்பப்படி இந்த வசதியை பயன்படுத்த முடியும்.

Meta கூறும் எச்சரிக்கை:
Meta தனது FAQ-இல் கூறியுள்ள ஒரு முக்கிய எச்சரிக்கை:
“மூன்றாம் தரப்பு ஆப்கள் உங்கள் தரவை வேறுவிதமாக கையாளலாம்” ( Third-party apps might handle your data differently)
- அதாவது, WhatsApp போலவே எல்லா ஆப்களும் தரவை கையாள்வதில்லை. சில ஆப்களில் வேறு தனியுரிமை கொள்கைகள் இருக்கலாம். எனவே பயனாளர்கள் எச்சரிக்கையாக இருந்தால் மிகவும் நல்லது.
- அதே நேரத்தில், கடந்த 10 ஆண்டுகளில் தனியுரிமை மீது மெட்டா சந்தித்த பல சர்ச்சைகளை நினைத்தால், பயனாளர்கள் இந்த எச்சரிக்கையை ஒரு வகையில் நம்பிக்கை ஊட்டுவதாகவே பார்க்கிறார்கள்.
WhatsApp பயனர் பெயர் (Username) — இனி எண்ணைப் பகிர வேண்டிய அவசியமே இல்லை!
இரண்டு ஆண்டுகளாக கசிந்துகொண்டிருந்த வாட்ஸ்அப் பயனர் பெயர் (username) வசதி இப்போது அதிகாரப்பூர்வமாக நிஜமாகிறது. Meta நிறுவனம் இது அடுத்த ஆண்டிற்குள் உலகளவில் அறிமுகமாகும் என உறுதி செய்துள்ளது.
இதன் மூலம், ஒருவர் தங்கள்:
- மொபைல் எண் பகிர வேண்டிய அவசியமே இல்லை.
- சமூக வலைத்தளங்களில் போல தனிப்பட்ட ‘handle’ உருவாக்கலாம்.
- தனியுரிமை மேலும் வலுப்படும்.
- ‘Reservation’ வசதி – உங்கள் பெயரை முன்பதிவு செய்யலாம்!
- WhatsApp தற்போது ‘reservation’ எனப்படும் புதிய வசதியில் பணிபுரிகிறது. இதன் மூலம்:
- Username வசதி முழுமையாக வந்துவிடும் முன்பே பயனர் தங்கள் விருப்பமான பெயரை “தக்க வைத்துக்கொள்ள” முடியும். இதுவே ஒரு பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

சுவாரஸ்யமான தகவல்:
பயனர்கள் தங்கள் Facebook அல்லது Instagram-ல் பயன்படுத்தும் பெயரை WhatsApp-ல் reserve செய்ய முடியும். ஆனால் அதை பெற, அவர்கள்:
- அந்த Facebook/Instagram கணக்கு தங்களுடையதே என்பதை Accounts Center மூலம் சரிபார்க்க வேண்டும்.
- ஒருமுறை reserve செய்துவிட்டால் மற்ற யாரும் அந்த username-ஐ பெற முடியாது.
பல messaging ஆப்கள் போட்டியிட வந்தாலும், எந்த ஆப்பையும் நெருங்கவிடாமல், தனது தனித்துவமும் எளிமையும் பாதுகாத்தபடி, அறிமுகமான நாள் முதல் இன்றுவரை பயனர்களை நம்பாக தன்மையுடன் தக்கவைத்து கொண்டுள்ளது Whatsapp.
