ரஜினி பட சர்ச்சையில் விசமத்தனமான ரசிகர்களிடம் வெடிக்கிறார் குஷ்பு.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்குவதில் இருந்து விலகுவதாக அறிக்கை தயார் செய்து அதை தானே வெளியிடாமல் தன் மனைவி குஷ்புவின் சமூக வலைத்தளம் மூலமாக வெளியிட்டார் சுந்தர் சி.
இந்த விவகாரம் குறித்து சுந்தர் சி வாய் திறக்கவே இல்லை. சுந்தர் சியின் நடவடிக்கையால் அதிர்ந்த ரசிகர்கள் சொல்லும் காட்டமான விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடியாக காட்டமாகவே பதில் சொல்லி வருகிறார் குஷ்பு.

வடிவேலு பட காமெடி வீடியோவை எடிட் செய்து அந்தப்படத்தில் வீட்டு வாசலில் பதைபதைப்போடு காத்திருக்கும் பெண்ணின் முகத்தில் குஷ்புவை வைத்து மார்பிங் செய்து, வீட்டுக்குள் இருந்து கதவை திறந்துகொண்டு ரஜினி ஓடுவது மாதிரி எடிட் செய்துள்ளார்கள்.
ரஜினிக்கு எதிராக விஷமிகள் எடிட் செய்திருக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை தனது எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்த குஷ்பு, ‘’உன் அம்மா அப்படித்தான் உன்னை பெத்தாங்களா?’’ என்று கேட்டு வெடித்திருக்கிறார்.

ஒருவேளை படத்தில் குஷ்புவுடன் ஆடலாமா? என்று கேட்டிருப்பார்களோ? அதனால்தான் படம் டிராப் ஆகிவிட்டதா? என்று ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு, ‘’இல்ல..உங்க வீட்டுல இருந்து யாரையாவது ஆட வைக்கலாம்னு நினைச்சோம்’’என்று வெடித்திருக்கிறார் குஷ்பு.

நேரடியாக பேசி முடிவெடுக்க வேண்டிய விசயத்தை அறிக்கையின் மூலமாக அறிவித்தது சுந்தர் சியின் அநாகரீக செயல் என்று பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், எல்லை மீறி அநாகரீகமாக விமர்சிக்கும் சில ரசிகர்களுக்கு அவர்கள் பாணியிலேயே பதிலடியும் கொடுத்து வருகிறார் குஷ்பு.
தலைவர்173 பட சர்ச்சையில் அதிகம் சிக்கியிருப்பது குஷ்புதான் போலிருக்கிறது.
