இருட்டில் மனிதனுக்கு எதையும் தெளிவாகப் பார்க்க முடியாது என்பது இயல்பானது. ஆனால் சீன விஞ்ஞானிகள் உருவாக்கிய ஒரு புதிய தொழில்நுட்பம், இந்த இயல்பையே மாற்றப் போகிறது. இப்போது மனிதன் கண்களை மூடியிருந்தாலும் இருட்டில் பார்க்க முடியும் என்கிற அதிசய லென்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு தொழில்நுட்ப உலகில் மட்டும் அல்ல, மருத்துவம், பாதுகாப்பு, இராணுவம், கண் குறைபாடு உள்ள நோயாளிகள் போன்ற பல துறைகளுக்கும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
யார் இந்த லென்ஸை உருவாக்கியிருக்கிறார்கள்?
சீனாவின் University of Science and Technology of China என்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் குழு இந்த லென்ஸை உருவாக்கியுள்ளது.
இந்த குழுவை வழிநடத்திய பிரொஃபசர் டியன் சூ (Prof Tian Xue) கூறியதாவது:
“இந்த லென்ஸ் எதிர்காலத்தில் மக்களுக்கு ‘super-vision’ அளிக்கும். இருளிலும் பார்க்கலாம், நிறக்குறை உள்ளவர்களுக்கும் உதவலாம், மேலும் பல அணிகலன்கள் மற்றும் அணிந்துகொள்ளும் சாதனங்கள் உருவாக்க வாய்ப்பு உள்ளது.”

மனித கண் ஏன் Infrared ஒளியை பார்க்க முடியாது?
உலகில் இருக்கும் ஒளிகள் மற்றும் கதிர்வீச்சுகள் அனைத்தும் ‘Electromagnetic Spectrum’ எனப்படும் ஒரு பெரிய தொகுதிக்குள் அடங்குகின்றன. அதில் ஏழு வகை அலைகள் உள்ளன:
ரேடியோ அலைகள்(Radio Waves), மைக்ரோவேவ் (Microwave), இன்ஃப்ராரெட் (INFRARED), Visible Light (மனிதன் பார்க்கும் ஒளி), அல்ட்ரா வயலெட் (UltraViolet Waves), எக்ஸ்-ரே (X Ray), கேமரா (Camera).
இதில் மனிதக் கண்கள் Visible Light என்பதை மட்டுமே பார்க்க முடியும். Infrared ஒளி மனிதக் கண்களுக்கு தெரியாத ஒன்று, ஆனால் அது எப்போதும் நம்மைச் சுற்றியே உள்ளது.

Night Vision Goggles
இதுவரை இருட்டில் பார்க்க உதவிய கருவிகள் என்ன?
இருட்டில் பார்க்க வேண்டுமானால் இராணுவம் அல்லது பாதுகாப்பு துறையில் பயன்படுத்தும் Night Vision Goggles போன்ற கருவிகள் தேவைப்பட்டது.
ஆனால், அவை மிகவும் கனமானவை, பேட்டரி தேவை அதிகம், தலையில் அணிவது சிரமம் மற்றும்
நீண்ட நேரம் பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல. ஆனால் இந்த புதிய கான்டாக்ட் லென்ஸ் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய லென்ஸ் எப்படி வேலை செய்கிறது?
இந்த லென்ஸின் ரகசியம் nanoparticles என்பது தான்.
Nanoparticles என்றால் என்ன?
இது மிகவும் சிறிய துகள்கள், மனிதன் பார்க்க முடியாத அளவு சின்னது, சில நூறு atoms சேர்ந்தே உருவானவை. இந்த துகள்களையே லென்ஸுக்குள் பொருத்தியுள்ளனர்.
அவை என்ன செய்கிறது?
இந்த துகள்கள்:
1. கண்களுக்கு தெரியாத Infrared ஒளியை பிடிக்கும்
2. அதை நீலம், பச்சை, சிவப்பு போன்ற மனித கண் பார்க்கக் கூடிய ஒளியாக மாற்றும்
3. அவ்வாறு மாற்றப்பட்ட ஒளியை நம் கண்கள் சாதாரணமாக பார்த்துவிடும்
அதனால் இருட்டிலும் நாம் கண்களை மூடியிருந்தாலும் Infrared ஒளி வந்தால் நம் கண்களுக்கு அது தெரியும்.
லென்ஸை பயன்படுத்தியவர்கள் என்ன சொல்கிறார்கள்?
- இந்த புதிய கான்டாக்ட் லென்ஸை (Infrared Lens) அணிந்து பலர் பரிசோதனை செய்து பார்த்தனர். அவர்கள் கூறியவை:
- Infrared விளக்கில் இருந்து வரும் சிக்னலை தெளிவாக பார்த்தோம்
- ஒளி எந்த திசையில் இருந்து வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடிந்தது; கண்களை மூடியிருந்தாலும் Infrared ஒளியைப் பார்த்தோம்.

கண்கள் மூடியிருந்தும் எப்படி பார்க்க முடிந்தது?
- நம் கண் இமைகள் visible light-ஐ (நாம் பார்க்கும் ஒளி) அதிகமாக தடுத்துவிடும்
- ஆனால் Infrared ஐ அதிகமாக தடுக்காது அதனால் கண்ணை மூடியிருந்தாலும் ஒளி Infrared லென்ஸை அடையும்.
- இந்த விஞ்ஞான உண்மை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதில் குறைகள் உள்ளதா..?
ஆம், விஞ்ஞானிகள் இரண்டு முக்கிய குறைகளை சொல்கிறார்கள்:
1. இது மிக மிக ஆர்ப்பாட்டமான Infrared ஒளியை மட்டும் கண்டறிகிறது, சிறிய அளவு வெப்பம் வெளியிடும் Infrared கதிர்களை (thermal vision) இதனால் பார்க்க முடிவதில்லை.
2. முழு night-vision போல வேலை செய்ய இன்னும் மேம்பாடு வேண்டும்
அதாவது, இந்த லென்ஸ் Predator movie போல முழு thermal vision கொடுக்காது, ஆனால் அந்த வழியில் அது ஒரு பெரிய முதல் படியாக கருதப்படுகிறது.
எதிர்காலத்தில் இது எங்கு பயன்படும்?
இந்த லென்ஸ் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும். உதாரணமாக:
1. மருத்துவத்துறை
கண் குறைபாடு உள்ள நோயாளிகளிடம், நிறக்குறை (color blindness) குறைந்த வெளிச்சத்தில் பார்க்க முடியாமல் உள்ளவர்களிடம்.
2. பாதுகாப்பு மற்றும் போலீஸ் துறை
இருட்டில் நடக்கும் குற்றங்களை கண்டறிதல், வெப்பத்தை வைத்து மனிதர்களைத் தேடுதலுக்கு இது மிகவும் உதவும்.
3. இராணுவம்
இரவு செயல்பாடுகள், புகை/இருள் நிறைந்த இடங்களை தெளிவாக வெளிச்சமிட்டு காட்டும், அதுமட்டும் இல்லமால் மிகவும் சிறியதாக உள்ளதால் எளிதில் பொருத்தி கொள்ளக்கூடியது.
Artificial intelligence அடிப்படையிலான பார்வை உதவி கூட இதில் கிடைக்கலாம்.
இந்த லென்ஸ் சாதாரண மக்களுக்கும் உதவுமா?
ஆம்! குறிப்பாக, இரவில் வண்டி ஓட்டும் மக்களுக்கு, கண்பார்வை முழுவதும் மங்கும் நிலையிலுள்ள நோயாளிகளுக்கு, குறைந்த வெளிச்சத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, வயதானவர்களுக்கு என எல்லோருக்கும் இந்த Technology மிகவும் பயன்படும்.
சீன விஞ்ஞானிகள் உருவாக்கிய Infrared Contact Lens மனிதன் பார்க்கும் உலகையே மாற்றக்கூடிய பெரிய கண்டுபிடிப்பு.மருத்துவ ரீதியில் மேம்படுத்த ஒரு பெரிய படியாக விஞ்ஞானிகள் இதனை நம்புகிறார்கள்.
