ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதரையே கடித்த கதையாக மரக்கிளையிலும் மின்சாரக் கம்பங்களிலும் ஏறிக்குதித்து வந்த தவெக தொண்டர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரையே கடித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் தர்மபுரியில் அரங்கேறி இருக்கிறது.
இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தொண்டர்கள் அணி, வணிகர்கள் அணி, மீனவர்கள் அணி, நெசவாளர்கள் அணி, மூன்றாம் பாலினத்தவர்கள் அணி, என்று தவெகவில் 28 அணிகள் இருப்பதாகத்தான் தவெக தலைமை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பட்டியல் வெளியிட்டது. இதில் கடி தொண்டர் அணி என்றும் இருக்கிறது போலிருக்கிறது. பட்டியலில் அது இடம்பெறாமல் போய்விட்டது போலிருக்கிறது.
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு பகுதியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் நவீன சொகுசு மதுபான கூடம் அமைந்திருப்பதால் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தவெகவினரும் நேற்று 8.12.2025ல் இந்த மதுபான கூடத்தை அகற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது மதுபான கூடத்தின் மீது தாக்குதல் நடத்த கயிறு மற்றும் தடுப்புச்சுவர்களை தாண்ட முயற்சித்தனர் தவெகவினர். போலீசார் இதை தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது. அந்த சமயத்தில் ஒரு தவெக தொண்டர் போலீசாரின் கையை கடித்துவிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தலைமைக்காவலர் அருளின் கையை கடித்தது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தவெக தொண்டர் ஜெமினி என்பது தெரியவந்ததும் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனால், தவெகவில் 28 அணிகள் இருப்பதாகத்தான் அறிவிப்பு வந்திருக்கும் நிலையில், ‘கடி’ அணி என்று ஒரு அணியும் இருக்கும் போலிருக்கிறது என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
