போதைப்பொருள் வழக்கில் சினிமா தயாரிப்பாளர் (Cinema producer) தினேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் துணை நடிகைகள் பலரும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிம்பு பட இணை தயாரிப்பாளர் கைது
கடந்த 2021ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான படம் ‘ஈஸ்வரன்’. இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் சர்புதீன். இவரது வீட்டில் வார இறுதியில் நடைபெறும் பார்ட்டியில் கொக்கெய்ன், மெத்தம்பெட்டமைன், ஓஜி கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக இவர் கைது செய்யப்பட்டார்.மேலும் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து 27 லட்சம் ரூபாய் பணம், மூன்று ஆப்பிள் ஐபோன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த வழக்கின் விசாரணையில் சர்புதீனுடன் சேர்ந்து சீனிவாசன், சரத் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு பின்னர் மூவரையும் சிறையில் அடைத்தனர்.

போலீசார் தீவிர விசாரணை
இந்த நிலையில் சர்புதீன், தொழில்அதிபர் சரத் ஆகியோரை திருமங்கலம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேலும் எந்தெந்த சினிமா விருந்துகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது? அதில் கலந்து கொண்ட திரை உலகினர் யார் என்பது தொடர்பாகவும் சர்புதீனிடம் விசாரணை நடத்தி பட்டியலை தயாரித்தனர்.

திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் கைது
நடிகர் தனுஷின் அக்காள் மகன் பவேஷ் நடிப்பில் “லவ் ஓ லவ்” எனும் படம் இயக்கப்படுகிறது. இதன் தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் (Dinesh Raj). இவர் சென்னை திருமங்கலம் பகுதியில் போதை பொருள் விற்றதாக கிடைத்த தகவலின் பேரிலும், சர்புதீன் கொடுத்த தகவலின் பேரிலும் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.இவர் வேறு ஏதேனும் பார்ட்டிகளுக்கோ அல்லது சினிமா பிரமுகர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்தாரா என விசாரணை நடத்தப்படுகிறது.

சினிமா துணை நடிகர், நடிகைகள் சிக்கும் வாய்ப்பு ?
சர்புதீன் நடிகர் சிம்புவிற்கு மேலாளராக பணியாற்றி உள்ளதால் பல நடிகர்கள், நடிகைகளுடன் பழக்கமுடையர்.எனவே அதில் யாருக்கெல்லாம் போதைப்பொருள் (drug cases) சப்ளை செய்துள்ளார்? என்பது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் துணை நடிகைகள் பலரும் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பிரபல நடிகைகளுக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
