தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி மாநிலம் உப்பளத்தில் உள்ள திடலில் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்காக போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக புதுச்சேரியில் பல இடங்களில் போக்குவரத்து தடைகள் ஏற்படுத்தப்பட்டன. நேற்று முதல் இந்த தடை ஏற்பட்டதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்து விஜய்க்கு எதிராக ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.

தங்களுடைய வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் தெருவில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு சுற்றி வரச்சொன்னதால் ஆத்திரமடைந்தனர். ’’விஜய் வந்து என்ன செய்யப்போறார்? அவர் எல்லாம் ஒரு ஆளுன்னு போகுற வர்ற ரோட்டி எல்லாம் இப்படி அடைச்சி வச்சிருக்கீங்களே..? இதெல்லாம் ரொம்ப அராஜகம்’’ என்று கொந்தளித்தனர்.
கூட்டத்திற்கு வரும் தவெகவினரை கட்டுப்படுத்த 700 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் காட்டிய கெடுபிடியில் பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். இதனால் பல இடங்களில் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
