நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதற்கு காரணமாக இருந்தார் அண்ணாமலை. அதனால்தான் தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை அகற்றினால்தான் கூட்டணி என்று எடப்பாடி உறுதியாக நின்றதால் அண்ணாமலையை மாற்றிவிட்டு நயினார் நாகேந்திரனை கொண்டு வந்தது டெல்லி தலைமை.
எந்த அண்ணாமலையை தமிழக பாஜக பொறுப்பில் இருந்து தூக்கினாரோ அதே அண்ணாமலை இப்போது எடப்பாடிக்கு தலைவலியாக அமைந்திருக்கிறார்.

அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் கொண்டு வர காய்களை நகர்த்தி வருகிறார் அண்ணாமலை.
வரும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் பிரதமர் மோடி ராமஸ்வரம் வருகிறார். அதற்குள் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இருவரையும் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அண்ணாமலை.
முதற்கட்டமாக ஓ.பன்னீர்செல்வத்தை டெல்லி அழைத்துச்சென்று அமித்ஷாவை சந்திக்க வைத்தார். இன்றைக்கு டிடிவி தினகரனை டெல்லி அழைத்துச் சென்று அமித்ஷாவ சந்திக்க வைக்கிறார்.

பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்க ஏற்பாடுகள் செய்கிறார் அண்ணாமலை. என்.டி.ஏ. கூட்டணியில் அமமுகவை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்கிறார் அண்ணாமலை. பாஜக மேலிடத்தின் திட்டப்படியே ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனைன் சந்தித்து அண்ணாமலை பேசி இருக்கிறார்.
கூட்டணி நடவடிக்கைகளை அண்ணாமலை மேற்கொள்வதால் அதிர்ச்சியில் இருக்கிறார் எடப்பாடி. இது ஒருபுறம் இருக்க, ஒரே வாரத்தில் இரண்டு முறை டெல்லி பயணம் மேற்கொண்டு பாஜக மேலிட தலைவர்களை அண்ணாமலை சந்திப்பதால் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அதிர்ந்து போயிருக்கிறார்.
