ஆதரவாக என்னென்னவெல்லாமோ பேசிப் பார்த்தும் கேசிபியை மீண்டும் அதிமுகவில் சேர்க்க முடியாது என்று கறார் காட்டிவிட்டர் எடப்பாடி.
கடந்த 2018ல் பன்னீர்செல்வமும் பழனிசாமியும் இணைந்து அதிமுகவை நடத்தி வந்தபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்போம் என்று அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த கே.சி.பழனிசாமி சொன்னதால் பாஜக கூட்டணியில் அது வெடித்ததால் கேசிபி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதன் பின்னர்தான் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டனர். அதிமுகவில் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்று ஓபிஎஸ்க்கும், இபிஎஸ்க்கும் நடந்த பிரச்சனையால் ஓபிஎஸ் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தான் முதல்வராக முயற்சி செய்தார் என்பதற்காக தினகரன் கட்சியை விட்டு நீக்க பட்டார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா , ஓபிஎஸ் மற்றும் தினகரன் இவர்களோடு சேர்த்து தலைமைக்கு எதிராக போர்க் கொடி தூக்கினார் என்பதற்காக செங்கோட்டையன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பிற்காக பன்னீர்செல்வம், தினகரனைப் போலவே கேசி பழனிசாமியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
’’காவிரி மேலாண்மை வாரியத்தில் ஜெயலலிதா எந்த நிலைப்பாட்டை எடுத்தாரோ அதே நிலைப்பாட்டில், திராவிட வழியில் தமிழகத்தின் நலனை பாதுக்காக்கும் வகையில் ,தேவைப்பட்டால் பாஜகவுக்கு எதிராகவும் கட்சியின் நலன் கருதி பயணிக்க வேண்டும் என்று சொன்னதற்காக கட்சியை விட்டு நான் வெளியேற்றப்பட்டேன். அதேபோல பாஜக குறித்த கருத்துக்களை கேபி.முனுசாமி , சிவி சண்முகம் ஜெயக்குமார் போன்றொரும் தெரிவித்தார்கள். அவர்களை மட்டும் ஏன் ஆதரித்தார் எடப்பாடி?’’ என்று கேள்வி எழுப்பி பார்த்தார். எந்த பதிலும் வரவில்லை.

’’அதிமுகவின் வாக்குகளை ஒருங்கிணைத்தால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி வருகிற தேர்தலில் வெற்றி அடையமுடியும். அதை உணர்ந்து செயல்படுவாரா எடப்பாடி? இரட்டை இலை கருகிப்போய் கொண்டிருக்கிறது, ஆடு தின்றுகொண்டு இருக்கிறது. அந்த இரட்டை இலை காப்பாற்றப்பட வேண்டும், இரட்டை இலை தோற்கக்கூடாது என்கிற ஒற்றை காரணத்திற்காக தான் கே.சி.பழனிசாமி போன்றோர் இந்த இயக்கம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோம்’’ என்றெல்லாம் கேசிபி பேசிப்பார்த்தும் பிரயோசனமில்லை.
விலக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பிடிவாதமாக இருந்ததால், ’’நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான்’ என்ற வார்த்தை ஒரு தலைவரிடத்திலிருந்து வரக்கூடாது. இப்படி இருப்பது உறுதிமிக்க தலைவர்களாக இருக்கலாம். ஆனால் உறுதிமிக்க தலைவர்கள் வென்றதாக வரலாறே கிடையாது. அரவணைத்து சென்றால் தான் வெல்ல முடியும்’’ என்றும் பேசிப்பார்த்தார் கேசிபி.
அதிலும் மனமிறங்கி கேசிபியை எடப்பாடி ஏற்றுக்கொள்ளாததால், எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் வெடித்த போது, அவருக்கு ஆதரவக செயல்பட்டால் கவனத்தை ஈர்க்கலாம் என்றெண்ணி, ‘’எடுத்த எல்லா முடிவின் போதும் 8 ஆண்டுகள் உடன் பயணித்துவிட்டு தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளிவந்து குடும்ப அரசியல் என்றெல்லாம் பேசுவது மக்கள் மத்தியில் பெரிய அளவு எடுபடவில்லை.
8 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி அவர்களை விமர்சனம் செய்யும் நான் கூட அரசியல் ரீதியாக தான் விமர்சித்திருக்கிறேனே தவிர அவரது தனிப்பட்ட விவகாரங்களுக்குள் சென்றதில்லை’’ என்றும் பேசிப்பார்த்தார்.

எப்படியாவது அதிமுகவில் மீண்டும் இணைந்துவிடலாம் என்று எடப்பாடிக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார் கேசிபி.
இதனால் அதிமுகவில் உள்ள சீனியர்கள் சிலரின் மூலமாக எடப்பாடியிடம் பேசியிருக்கிறார் கேசிபி. ஆனாலும் கேசிபியை மீண்டும் அதிமுகவில் சேர்க்க முடியாது என்று உறுதியாக சொல்லி இருக்கிறார் எடப்பாடி.
கட்சியை விட்டு நீக்கிய பின்னர் பன்னீர்செல்வம், தினகரன் போல் எடப்பாடிக்கு எதிராக பெரிதாக எந்த எதிர்ப்புகளை காட்டாமல் இருந்தபோதிலும் கூட, கேசிபியை மீண்டும் சேர்த்துக்கொள்ள எடப்பாடி மறுத்து அவருக்கு கதவடைத்தது ஏன் என்ற கேள்வி அதிமுக வட்டாரத்திலெ எழுந்திருக்கிறது.
