அதிமுகவில் பொதுக்குழுவில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், அரசியல் புரோக்கர்கள், துரோகிகள் என்று வெடித்திருக்கிறார். இதையடுத்து யார் அந்த அரசியல் புரோக்கர்கள், துரோகிகள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சென்னை வானகரத்தில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் பேசிய சி.வி.சண்முகம், ‘’எப்படியாவது அதிமுகவை அழித்துவிட வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதிலே எதிரி மட்டுமல்ல, துரோகி மட்டுமல்ல, நம்மோடு உறவாடிக் கொண்டிருப்பவர்களும் இதிலே இருக்கிறார்கள். அதில்தான் நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

நமக்கு எதிரி யார் என்பது நமக்குத்தெரியும். ஆனால் துரோகி யார் என்று தெரியும். ஆனால் நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம்தான் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
சில அரசியல் புரோக்கர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களை நாம் இனம் கண்டுகொள்ள வேண்டும். அப்படி இனம் கண்டு கொண்டால்தான் பல்வேறு சதித்திட்டங்களை தீட்டினாலும் அதிகார பலம், ஆட்சி பலம், பண பலம் இத்தனையும் மீறி, இத்தனையையும் முறியத்து இந்த கட்சியை இன்றைக்கு நிலை நிறுத்தி இருக்கிறார்.

திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போதிலும் கூட, துரோகிகள், எதிரிகள் என்று பேசினார். இதன் மூலம் அமித்ஷா என்ன சொன்னாலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பு நடக்க வாய்ப்பில்லை என்றே அப்பட்டமாகத் தெரிகிறது.
