ரன்வீர் சிங்கின் திரில்லர் திரைப்படமான துரந்தர், பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பதாக ஆறு வளைகுடா நாடுகளில் (Gulf-countries) தடை செய்யப்பட்டுள்ளது.
துரந்தர் திரைப்படம்
துரந்தர் (Durandhar) திரைப்படம் டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. ஆதித்யா தர் இப்படத்தை எழுதி, இயக்கி, இணைத் தயாரித்துள்ளார்.மேலும்,ரன்வீர் சிங், சஞ்சய் தத், ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால், அக்ஷய் கண்ணா, மற்றும் சாரா அர்ஜுன் போன்ற நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர்.

உண்மைச் சம்பவ கதையா ?
உண்மைக் சம்பவங்கள், புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் RAW-வின் இரகசிய நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு கற்பனைக் கதை இது. 1999 ஏர் இந்தியா விமானக் கடத்தல் மற்றும் 2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு சவாலாக இருக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளைப் பற்றிய கதை ஆகும்.

மேலும், இப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான முதல் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ரன்வீர் சிங் மற்றும் அக்ஷய் கன்னாவின் நடிப்பு, இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு பாராட்டுகளைப் பெற்றன. இருப்பினும், படத்தின் நேரம் (3 மணிநேரம் 34 நிமிடங்கள்) அதிகமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியீடு?
மேலும், இது இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படத் தொடரின் முதல் பாகமாகும். இதன் இரண்டாம் பாகம் மார்ச் 19, 2026 அன்று வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துரந்தர் திரைப்படத்திற்கு 6 நாடுகளில் தடை
துரந்தர் திரைப்படம் பாகிஸ்தானுக்கு எதிரான கதைக்களம் (anti-Pakistan theme) கொண்டிருப்பதால் பஹ்ரைன்(Bahrain), குவைத்(Kuwait), ஓமன் (Oman), கத்தார் (Qatar), சவுதி அரேபியா (Saudi Arabia) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)ஆகிய ஆறு வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.
