வேலுச்சாமிபுரம் துயர சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்ட சிபிஐ, பரப்புரை மேற்கொண்ட தவெக தலைவர் விஜய்க்கு ஏன் இன்னமும் சம்மன் அனுப்பி விசாரிக்கவில்லை. இதன் மர்மம் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த மர்மத்திரைக்கு பின்னால் அமித்ஷாவும், பழனிசாமியும் இருக்கிறார்களா எனவும் கேள்விகள் எழுகின்றன.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி அன்று தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தவெக கோரியபடியே இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சம்பவத்தின் போது இருந்த போலீசார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் , தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிற்து.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணைச்செயலாளர் நிர்மல்குமார், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இவர்களும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்துள்ளனர்.

விஜய் பிரச்சார வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய நபரான தவெக தலைவர் விஜயிடம் மட்டும் ஏன் இன்னமும் சிபிஐ விசாரணை நடத்தவில்லை? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
கூட்டணி விவகாரத்திற்காக அமித்ஷா சிபிஐ விசா ரணையை காத்திருப்பு பட்டியலில் வைத்திருக்கிறார் என்கிறார்கள். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கூட விஜயை பழனிசாமி விமர்சிக்காமல் இருப்பதும் கூட இதை உறுதிப்படுத்துகிறது.

பாஜகவின் பின்னணியில் இயங்குவதால்தான் சிபிஐக்கு விஜய் தண்ணி காட்டுகிறார் என்கிற பேச்சு ஒரு புறமிருக்க, விஜயை விசாரிக்க சிபிஐ முடிவு செய்திருக்கிறது. கரூருக்கு அவரை அழைத்து விசாரிக்கலாம் என்று முதலில் முடிவெடுத்திருந்தது. பாதுகாப்பு சிக்கல் ஏற்படும் என்பதால் சென்னையிலேயே விஜயிடம் விசாரணை நடத்த சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கிறது என்கிறது பனையூர் தவெக வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்.
