’பேட்ட’ படத்திற்கு ரஜினியின் ஜெயிலர் -2 படத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி. பேட்ட படத்தைப்போலவே ஜெயிலர்-2 படத்திலும் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார்.
இதையடுத்து விஜய்சேதுபதி வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தில் நடிக்கிறார். செக்கச்சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார். விடுதலை படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் என்ன கேரக்டர்? என்று கேட்டால், ‘’சேது, எழுதும் போது உங்க ஞாபகம் வருது எழுதட்டுமா?’’என்று கேட்டார் வெற்றிமாறன். உடனே, ‘’எழுதுங்க வெற்றி. உங்க மனசுல நான் வர்றேன்ல. அது போதும், நான் வர்றேன்’’ என்று சொல்லிவிட்டேன் என்கிறார் ரொம்ப சிம்பிளாக.
மேலும், ‘’அது என்ன கேரக்டர்னு எனக்கு தெரியாது. ஒரு படம் எப்படி வரவேண்டும், அந்த கதாபாத்திரங்கள் எப்படி வரவேண்டும்? என்பதில் ரொம்பவே அக்கறையோடு செயல்படக்கூடியவர் வெற்றிமாறன். அதனால் அவர் என்ன கதை வைத்திருப்பார்? எப்படி எடுப்பார்? என்ற சந்தேகம் எல்லாம் தேவையில்லை. நம்பி அவரிடம் ஒப்படைக்கலாம்’’ என்கிறார்.
