உலகம் முழுவதும் காலநிலை மாற்றம்(Climate Change), இயற்கை அழிவு, வெப்பநிலை உயர்வு, உயிரினங்கள் அழிவு போன்ற பிரச்சனைகள் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கின்றன. பல நாடுகளில் கார்பன் உமிழ்வு அதிகரித்தது. காடுகள் அழிக்கப்பட்டன. கடல்கள் மாசடைந்தன.
இத்தனை சவால்களுக்கு மத்தியில், 2025 ஆண்டு முழுவதும் பூமிக்குச் சாதகமாக சில முக்கியமான, ஆனால் அதிகம் பேசப்படாத முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவை பெரிய தலைப்புச் செய்திகளாக மாறாமல் போனாலும், எதிர்காலத்திற்கு நம்பிக்கையை அளிக்கும் மாற்றங்களாகும்.
உலக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள 2025-ல் நடந்த 7 முக்கியமான காலநிலை மற்றும் இயற்கை பாதுகாப்பு வெற்றிகள் பற்றி இங்கே எளிமையாக பார்ப்போம்.

1. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy)
2025-ல் ஒரு முக்கியமான வரலாற்று மாற்றம் நிகழ்ந்தது.
முதன்முறையாக உலக மின்சார உற்பத்தியில் நிலக்கரியை விட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (சோலார், காற்றாலை) அதிக பங்கை பெற்றது.
உலகளாவிய நிலை:
- காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் மின்சாரம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்தது
- 80%-க்கும் மேற்பட்ட நாடுகளில் Renewable capacity உயர்ந்தது
- சர்வதேச ஆற்றல் அமைப்பு (IEA) கணிப்பின்படி, 2030க்குள் இந்த திறன் இரட்டிப்பாகும்
சீனாவின் பங்கு:
- சீனா சுத்த ஆற்றல் தொழில்நுட்பங்களில் உலகின் முன்னணி நாடாக மாறியது
- காற்றாலை, சோலார் உபகரணங்கள் ஏற்றுமதியில் முதலிடம்
- புயல்களைக் தாங்கும் offshore wind farms நிறுவப்பட்டன
- Carbon Brief ஆய்வு படி, 2025 மே வரை சீனாவின் கார்பன் உமிழ்வு குறைந்தது
- இது சீனாவின் உமிழ்வு உச்சத்தை (peak) எட்டியிருக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது
இங்கிலாந்து:
- 2025-ல் காற்றாலை மின்சாரம், நாட்டின் மொத்த தேவையில் மூன்றில் ஒரு பங்கை நிறைவேற்றியது
- நிலக்கரி மின் உற்பத்தி முற்றிலும் அருகில் இல்லாத நிலைக்கு வந்தது
- உலகின் மிகப்பெரிய Liquid Air Battery அமைப்பை உருவாக்க தொடங்கியது
ஆனால், விஞ்ஞானிகள் இந்த முன்னேற்றம் போதுமானது அல்ல. காலநிலை இலக்குகளை அடைய இன்னும் வேகம் தேவை என கூறுகிறார்கள்.
2. கடல்கள் பாதுகாப்பில் வரலாற்றுச் சாதனை
பல ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, High Seas Treaty எனப்படும் சர்வதேச ஒப்பந்தம் 2025-ல் நடைமுறைக்கு வந்தது.
ஏன் இது முக்கியம்?
- உலகக் கடல்களில் மூன்றில் இரண்டு பகுதி எந்த நாட்டிற்கும் சொந்தமில்லை
- இதுவரை அந்தப் பகுதிகளில் 1% மட்டுமே பாதுகாக்கப்பட்டுள்ளது.
- புதிய ஒப்பந்தம், 30% கடல்பரப்பை பாதுகாப்பு பகுதியாக மாற்றும் நோக்கத்துடன் செயல்படுகிறது
பிரெஞ்ச் பாலினீசியா:
- உலகின் மிகப்பெரிய Marine Protected Area உருவாக்கப்பட்டது
- பரப்பளவு: 11 லட்சம் சதுர கிலோமீட்டர்
- பெயர்: Tainui Atea

3. காடுகள் பாதுகாப்பில் பிரேசிலின் முன்னேற்றம்
2025-ல் நடந்த COP30 மாநாடு அமேசான் காடுகள்(Amazon Forest) உள்ள பெலேம் (Belem) நகரில் நடைபெற்றது.
முக்கிய அறிவிப்புகள்:
- 2030க்குள் காடழிப்பை முடிவுக்கு கொண்டு வரும் Roadmap
- 90-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு
- Tropical Forests Forever Facility என்ற புதிய நிதி திட்டம்
- இலக்கு: 125 பில்லியன் டாலர்
- தற்போதைய உறுதி: 6.7 பில்லியன் டாலர்
காடழிப்பு குறைவு:
- அமேசான் காடழிப்பு 11% குறைந்தது (11 ஆண்டுகளில் குறைந்த அளவு)
- Cerrado பகுதியில் 43% குறைவு (Imazon அறிக்கை)
- UN அறிக்கை: 1990 முதல் உலகளாவிய காடழிப்பு 38% குறைந்துள்ளது
இருந்தாலும், ஆண்டுதோறும் 1.09 கோடி ஹெக்டேர் காடு அழிக்கப்படுகிறது – இது இன்னும் பெரிய சவால்.
4. வனவிலங்குகள் மீண்டும் உயிர் பெறுகின்றன
2025-ல் பல அபாய நிலையில் இருந்த உயிரினங்கள் நம்பிக்கை அளிக்கும் மீட்புகளை கண்டன.
கடல் ஆமைகள்:
- Green Turtle இப்போது “Least Concern” என மறுவகைப்படுத்தப்பட்டது
- பல தசாப்தங்களாக நடந்த பாதுகாப்பு முயற்சியின் பலன்
- Florida-வில் 2,000-க்கும் மேற்பட்ட Leatherback turtle முட்டையிடல் பதிவானது
இந்தியாவின் புலிகள்:
- உலகின் 75% புலிகள் இப்போது இந்தியாவில்
- எண்ணிக்கை: 3,600+
- வேட்டையாடல் கட்டுப்பாடு, வாழ்விட பாதுகாப்பு காரணம்
- இந்தியா உலகுக்கு ஒரு மாதிரியாக மாறியுள்ளது

5. காலநிலை தொடர்பான சட்ட வெற்றி
சர்வதேச நீதிமன்றம் (ICJ) 2025-ல் ஒரு முக்கிய கருத்துரையை வெளியிட்டது.
- நாடுகள் காலநிலை பாதிப்புகளுக்காக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்
- இது கட்டாயம் இல்லை (non-binding)
- ஆனால் சட்டரீதியாக பெரிய தாக்கம் உண்டு
சுற்றுச்சூழல் சட்ட நிபுணர்கள் இதை வரலாற்றுச் சாதனை என வரவேற்றுள்ளனர்.
6. பழங்குடியின மக்களுக்கு உலகளாவிய அங்கீகாரம்
ஐ.நா மாநாடுகள்:
- COP16: பழங்குடியினங்களுக்கான நிரந்தர குழு அமைக்கப்பட்டது
- COP30: வரலாற்றிலேயே அதிகமான பழங்குடியினர் பங்கேற்பு
- 2,500 பிரதிநிதிகள்
பிரேசில்:
- 10 புதிய பழங்குடியினர் நிலப்பரப்புகள் அறிவிப்பு
ஆனால், நடைமுறை அமல்படுத்தல் இன்னும் உறுதி இல்லை என செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கின்றனர்.
7. அமெரிக்காவில் நதிக்கு மீண்டும் உயிர்
கலிபோர்னியாவின் Klamath River ஒரு பெரிய மாற்றத்தை கண்டது.
- 2024-ல் 4 நீர்மின் அணைகள் அகற்றப்பட்டன
- 2025-ல் சால்மன் மீன்கள் மீண்டும் நதிக்கு திரும்பின
- இது எதிர்பார்த்ததை விட வேகமாக நடந்தது
- பழங்குடியினர் தலைமையிலான போராட்டம் இதற்குக் காரணம்
இது இயற்கை மீட்பு எவ்வளவு வேகமாக நடக்க முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம்.

2025 உலகத்திற்கு எளிதான ஆண்டு அல்ல.
ஆனால், இந்த 7 நிகழ்வுகள் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்கின்றன:
சரியான முடிவுகள், அரசியல் கவனம், மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் – பூமி மீண்டும் குணமடைய முடியும்.
இந்த வெற்றிகள் சிறியதாகத் தோன்றினாலும், எதிர்காலத்திற்கு பெரிய நம்பிக்கையை விதைக்கின்றன.
