பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெட்ஃபிக்ஸ் நிறுவனம், ஒன்பது தமிழ் திரைப்படங்களின் டிஜிட்டல் உரிமையை புதன்கிழமை (17/01/2024) வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த படங்கள் திரையரங்குகளில் வெளியான பிறகு OTT தளத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பட்டியலில்
- நடிகர் அஜித் குமாரின் விடா முயற்சி
- நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2
- பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் தங்கலான்
- சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் SK 21
- கான்ஜூரிங் கண்ணப்பன்
- கன்னிவேதி
- விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா
- சொர்க்க வாசல்
- ரிவால்வர் ரீட்டா
உள்ளிட்ட 9 தமிழ் திரைப்படங்களின் டிஜிட்டல் உரிமத்தை Netflix நிறுவனம் வாங்கியுள்ளது.
இதைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்ட Netflix நிர்வாகத் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில், “பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்களோடு சேர்த்து, தமிழ்த் துறையின் சிறந்த தயாரிப்பாளர்களிடமிருந்து டிஜிட்டல் உரிமையை பெற்றதைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த ஆண்டு, லியோ, துணிவு மற்றும் மாமன்னன் போன்ற படங்கள் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள எங்கள் சந்தாதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தன”, என தெரிவித்துள்ளார்.
விடா முயர்ச்சி மற்றும் இந்தியன் 2 போன்ற படங்கள் இன்னும் படப்பிடிப்பு நிலையில் உள்ள நிலையில், OTT தளத்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.