’’தேர்தல் களத்தில் நான் எடுத்த முடிவுகளை பலரும் விமர்சிப்பதுண்டு. 2 சீட்டா 4 சீட்டா என்பதில் பிரச்சனை இல்லை. 2 சீட்டை 8 சீட்டாக்கினாலும் 4 சீட்டை 10 சீட்டாக்கினாலும் நான் முதலமைச்சர் நாற்காலியில் உட்காரப்போவதில்லை. அந்த எண்ணிக்கையைப் பொறுத்தது அல்ல என் பிரச்சனை.
நான் பேசுகிற அரசியல் எந்த அளவுக்கு மக்களிடத்தில் போய்ச் சேருகிறது என்பதில்தான் எனக்கு பிரச்சனை. நான் பேசுவதை கேட்பதற்கான இடம் எனக்கு தேவைப்படுகிறது. ஊடகம் என்னை கவனிப்பதற்கு ஒரு புள்ளி எனக்கு தேவைப்படுகிறது.

அதனால் தேர்தல் அரசியல் மூலம் என்னை தற்காத்துக்கொள்கிறேன். பதவி எனக்கு பெரிதல்ல. 10 சீட் கூடுதலாக வாங்கிவிடுவதால் இங்கே புரட்சிகரமான எந்த மாற்றத்தினையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை. அதுதான் எனக்கு பெரிதென்றால் கூடுதலாக தருகின்ற இடத்திற்கு என்னால் போய்விட முடியும். பதவிதான், எண்ணிக்கைதான் பெரிதென்றால் கூடுதலாக பதவிகளையும் எண்ணிக்கையினையும் அள்ளித்தருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிற போது நான் அங்கே ஓட முடியுமே?
பல விமர்சனங்களையும் தாண்டி இந்த திருமாவளவன் திமுக கூட்டணியில் நீடிப்பதற்கு காரணம்..பதவி ஆசை இல்லை என்பதுதான். பொருள் ஆசை இல்லை என்பதுதான்’’.
-மதுரையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியது.
