எடப்பாடி பழனிசாமியால் புறக்கணிக்கப்பட்டவர்களும், எதிர்ப்பாளர்களும் விஜய்யோடு கைகோர்க்கிற பொழுது ஒரு புதிய அதிமுகவாக தவெக உருவெடுக்கும் என்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி.
அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டவர்களை மீண்டும் அதிமுகவில் ஒருங்கிணைக்க முடியாது என்று எடப்பாடி பிடிவாதமாக இருப்பதால் காத்திருந்து காத்திருந்து இனியும் காலத்தை கழிக்க வேண்டாமென்று நினைத்து மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியிலாவது இணையலாம் என்றால் குறைந்த அளவு சீட் ஒதுக்கி அசிங்கப்படுத்தி அதற்கும் எடப்பாடி வழி செய்யாமல் இருப்பதால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் போன்றவர்களும் தவெக பக்கம் தாவும் எண்ணத்தில் உள்ளனர்.
இதனால்தான், ‘’எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் அதிமுக என்பதில் இருந்து மாறி எடப்பாடி தலைமையிலான அதிமுக(எதிமுக) எடப்பாடி திமுகவாக பரிணமித்துவிடும்.
எப்படி 1989இல் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு “ஜா & ஜெ” என்று அணிகள் பிளவு பட்டு அன்றைய “ஜா” அணி போல எடப்பாடி அணியும், அன்றைய “ஜெ” அணியை போல புதிய அதிமுகவாக தவெகவும் உருவெடுக்கும்’’ என்கிறார் கே.சி.பழனிசாமி.
