எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது. நாளை இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில் இன்று வெளியாகி இருக்கிறது.
அனிருத் இசையில் ‘செல்ல மகளே…’ என்று விவேக் எழுதிய பாடலை விஜய் பாடி இருக்கிறார். அனிருத் ஸ்டைலில் இப்பாடலை பாடி இருக்கிறார் விஜய்.

கண்ணே மணியே கண்னிமையே.. என் கைக்குள்ள மலர்ந்தவளே.. எந்தன் நெஞ்சில் குடியிருக்கும் நீதானே என் உயிரே… நீதானே எனக்கெல்லாமே.. என் செல்ல மகளே… என்று உருக்கமுடன் பாடி இருக்கிறார் விஜய்.
இப்பாடலுக்கு பாபா பாஸ்கர் நடனம் அமைத்திருக்கிறார்.
