டாடாநகர் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து விஜயவாடா (Vijayawada) மண்டல ரயில்வே மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
ரயிலில் தீப்பிடித்து விபத்து
ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) மாநிலம், யலமஞ்சிலி அருகே டாடாநகர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பி1 மற்றும் எம்2 ஆகிய இரண்டு குளிர்சாதனப் பெட்டி முழுவதும் எரிந்து சேதமடைந்த நிலையில், இந்த தீ விபத்தில் விஜயவாடாவைச் சேர்ந்த பயணி சந்திரசேகர் சுந்தரம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே மீட்புக் குழுவினர் பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் உடனடியாக விசாரணையை தொடங்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மூத்த ரயில்வே அதிகாரி வெளியிட்ட தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எப்படி தீ விபத்து ஏற்பட்டது?
ரயில்வே அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், மின்சார கோளாறு (Electrical Short Circuit) காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக, ஒரு பயணிகள் பெட்டியில் உள்ள மின்சார வயரிங் பகுதியில் திடீர் ஸ்பார்க் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அருகில் இருந்த எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் தீப்பற்றியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் கொண்டு வந்த பொருட்களும் காரணமா?
மேலும் இந்த விபத்து குறித்து பேசிய ரயில்வே அதிகாரி, சில நேரங்களில் பயணிகள் கொண்டு வரும் எரிபொருள் பொருட்கள், கேஸ் ஸ்டவ், தீப்பெட்டி, மொபைல் பவர் பேங்குகள் போன்றவை தவறான முறையில் பயன்படுத்தப்பட்டால் தீ விபத்துக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.
பயணிகள் உயிர் தப்பியது எப்படி?
மேலும், தீப்பிடித்ததை உடனடியாக கவனித்த ரயில் ஊழியர்கள், எமர்ஜென்சி பிரேக் பயன்படுத்தி ரயிலை நிறுத்தினர் என்றும் அதன் பின்னர் பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர் எனவும் தெரிவித்துள்ளனர்.மேலும், ரயிலில் இருந்த தீ அணைப்பான் கருவிகள் (Fire Extinguishers) மூலம் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் சிலர் புகை மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டனர் எனவும் தெரிவித்தனர்.
