தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவை தூக்கிலிட்டாலும் தவறில்லை என்று வெடித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.
கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆற்று நீர் பயன்படுத்துதல் , நிதி ஒதுக்குதல் ஆகியவற்றில் கடந்த பி.ஆர்.எஸ். ஆட்சியில் மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. ஆற்று நீர் விவகாரங்களில் நடந்த அநீதிக்காக அவர்களை தூக்கிலிட்டாலும் தவறில்லை என்று கூறினார்.

தெலுங்கானா கவிஞர் கலோஜி நாராயணா ராவின் ‘’நம்மைச் சுரண்டு வெளியாட்களை விரட்டியடிப்போம், நம்மைச் சுரண்டும் சொந்தப் பகுதி மக்களை உயிருடன் புதைப்போம்’’ என்ற வரிகளை சுட்டிக்காட்டி ரேவந் ரெட்டி இதைச் சொல்லி இருக்கிறார்.
மாநிலத்தில் முதலமைச்சரே மரணத்தை விரும்புவதாகச் சொல்கிறாரே என்று ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சுக்கு பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
