ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் அமைந்துள்ள பிரபல மீன் சந்தையில் (Tokyo fish market) நடைபெற்ற ஏலம், உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஏலத்தில் ஒரு பெரிய டூனா மீன் ரூ.28 கோடி என்ற அபார விலையில் விற்கப்பட்டது
டூனா மீன்
டூனா (சூரை) என்பது கானாங்கெளுத்தி வகையைச் சேர்ந்த, கடலில் வேகமாக நீந்தக்கூடிய, உலகளவில் பிரபலமான ஒரு கடல் மீன் ஆகும். இதன் சிறப்பம்சங்கள்: மிக வேகமான நீச்சல் திறன், உடல் வெப்பநிலையை நீரின் வெப்பநிலையை விட அதிகமாக வைத்திருக்கக்கூடிய தன்மை, பலவிதமான அளவுகளில் இருத்தல், மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்தது.
கடும் போட்டியை ஏற்படுத்திய டூனா
இந்த ஆண்டின் மீன் ஏலத்தில் (Tuna auction) விற்பனைக்கு வந்த டூனா மீன் மிகப் பெரிய அளவிலும், நல்ல தரத்திலும், புதியதாகத் (fresh) இருந்ததால்,ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகளிடையே கடும் போட்டியை உருவாக்கியது.
விற்பனையாளர் மற்றும் சாதனை
இந்த மதிப்புமிக்க மீனை வாங்கியவர் கியோஷி கிமுரா, ஜப்பானின் (Sushi Zanmai) சங்கத்தின் உரிமையாளர். கிமுரா கடந்த 2019ஆம் ஆண்டு ¥334 மில்லியன் செலுத்தி வாங்கிய சாதனையை மீறி புதிய சாதனை படைத்தார்.

சுஷி தயாரிப்புக்கான முக்கிய பயன்பாடு
ஏலத்தில் வாங்கப்பட்ட இந்த டூனா மீன், ஜப்பானின் பாரம்பரியமான சுஷி மற்றும் பிற கடல் உணவுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், உயர்தர சுஷி உணவகங்களில் இந்த மீன் பயன்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பான் மீன் வணிகத்தின் முக்கியத்துவம்
இந்த ஏலம், ஜப்பானின் மீன் வணிகம் உலகளவில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ஒரே மீன் இவ்வளவு உயர்ந்த விலையில் விற்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
