அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 17 சீட் மற்றும் 1 ராஜ்யசபா சீட் என்று உறுதியாகி இருக்கிறது. அப்படி என்றால் ராமதாஸ் பாமவுக்கு எத்தனை சீட்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு இன்று காலையில் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றனர். கூட்டணியை இறுதி செய்ய தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 17 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்று உறுதியாகி இருக்கிறது.

இதையடுத்து ராமதாஸ் தலைமையிலான பாமகவையும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சி.வி.சண்முகம் ராமதாசை சந்தித்து பேசுவதாக தகவல். ஒருவேளை ராமதாஸ் கூட்டணிக்கு வந்தால் அவருக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும்? என்ற கேள்வி இருக்கிறது.
23.12.2025 ல் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலாபேலஸ் ஓட்டலில் பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு 23 சீட் ஒதுக்குவதாக ஒப்புக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இப்போது அன்புமணிக்கு 17 சீட் கொடுத்துவிட்டதால் மீதம் 6 தொகுதிகள்தான் உள்ளன. இல்லை, ராமதாஸ் வரும் பட்சத்தில் கூடுதல் இடங்கள் ஒதுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

அன்புமணியை எப்படியும் தோற்கடித்தே தீருவேன் என்று ராமதாஸ் சபதமேற்றிருக்கும் நிலையில் அவர் முதலில் அன்புமணி இருக்கும் கூட்டணிக்குள் வர சம்மதிப்பாரா? என்பதை பார்க்கலாம் என்கிறது தைலாபுரம் வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்.
