கடந்த தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் இருந்தாலும் கூட இந்த 2026 தேர்தலில் பாமக, தேமுதிக இரண்டும் கூட்டணியில் இருப்பதை உறுதி செய்யாமலே இருந்து வந்தன.
இந்நிலையில் இன்று அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக உள்ளது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார் அன்புமணி.

தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் கூட்டணியில் இன்னும் குழப்பம் இருப்பதால் அதை நிறைவு செய்யச்சொல்லி தமிழகம் வந்து சென்ற அமித்ஷா போட்ட உத்தரவின் படி கூட்டணி இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் வேகமெடுத் திருக்கின்றன. இதில் முதலாவதாக பாமக கூட்டணியில் இருப்பதை உறுதி செய்திருக்கிறது. அடுத்ததாக தேமுதிகவிடம் பேச்சு நடப்பதாக தெரிகிறது. உடனே அக்கட்சி கூட்டணியை அறிவிக்கிறதா? இல்லை மாநாட்டை முடித்த பின்னர்தான் அறிவிக்குமா? என்பது கேள்விக்குறிதான்.
அதிமுக கூட்டணியில் பாமக வந்தது குறித்து, அதாவது அன்புமணி தலைமையிலான பாமக வந்தது குறித்த கேள்விக்கு,

’’அது எதிர்பார்த்த ஒன்றுதான். இது ஒன்றுதான் அவர்களுக்கு வாய்ப்பாக இருக்கிறது. அதனால் இந்த கூட்டணிக்கு போவார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். எதிர்பாராத ஒன்று நடந்தால்தான் அது சுவாரஷ்யம் இருக்கும். எதிர்பார்த்த ஒன்று நடந்ததில் என்ன இருக்கிறது? ’’என்று கேட்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
