அமித்ஷா தமிழகம் வந்து சென்ற பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் நடவடிக்கைகள் மேகமெடுத்திருக்கின்றன. அன்புமணி தலைமையிலான பாமக கூட்டணியில் இணைவது இறுதியாகி இருக்கிறது.
இதனால்தான், அமித்ஷா திட்டமிட்டது தெளிவாக நடைபெறுகிறது என்கிறார் பாஜக நிர்வாகி தமிழிசை. அவர் மேலும், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது மகிழ்ச்சியான தருணம் என்கிறார்.

ஆனால் ராமதாசுக்கு இதில் விருப்பம் இல்லை என்பதை அவர் தெரிவித்திருக்கிறார். ’’அதிமுக கூட்டணியில் அன்புமணி இணைந்தது ஏற்புடையது அல்ல’’ என்று சொல்லும் ராமதாஸ், ‘’அன்புமணியை பாமக தலைவர் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னது சட்டத்திற்கு எதிரானது’’ என்கிறார்.
பாமகவில் தந்தை – மகன் மோதல் நீடிப்பதால் அக்கட்சி ராமதாஸ் தலைமையிலான கட்சி, அன்புமணி தலைமையிலான கட்சி என்று இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதில் எந்த அணி அதிகாரப்பூர்வ பாமக? என்ற பிரச்சனை இரு வரும் நிலயில்அன்புமணி தலைமையிலான பாமகவை முதலில் கூட்டணிக்குள் சேர்த்துக்கொண்ட எடப்பாடி, அடுத்ததாக ராமதாசையும் கூட்டணிக்குள் இழுக்க சிவி சண்முகம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் திரென்று எடப்பாடி பழனிசாமி சட்டத்திற்கு எதிராக செயல்பட்டதாக வெகுண்டெழுந்திருக்கிறார்.
