கேரளா ஸ்டோரி பட விவகாரத்தில் நீதிமன்றத்தில் சாதித்த மூத்த வழக்கறிஞர் சதீஷ் பாராசரன் தான் ஜனநாயகன் பட விவகாரத்திலும் படக்குழு சார்பாக ஆஜராகி வாதாடி வருகிறார். கேரளா ஸ்டோரி ரிலீஸ் ஆக வாதாடி பெற்ற இவரால் ஜனநாயகனை ரிலீஸ் ஆக விட முடியாமல் போகும் அளவிற்கு ஒன்றிய அரசின் அழுத்தம் இருக்கிறது என்கிறார்கள்.
இது குறித்து பத்திரிகையாளர் அரவிந்தாக்சன், ‘’கேரளா ஸ்டோரி என்ற வெறுப்பு பிரச்சார திரைப்படத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், எந்த ஆதாரங்களும் இன்றி 30,000 பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்து, தீவிரவாதிகளாக மாற்றப்பட்டு ஈரான்,ஆப்கான்,துருக்கி நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர் என்று படத்தில் கூறுகின்றனர். இது உள்நோக்கம் கொண்ட செயல் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது, சன்ஷைன் பிக்சர்ஸ் படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான சதீஷ் பராசரன் யாரெல்லாம் தீவிரவாதிகளாக மாற்றியுள்ளனர் என்று தலைகளை எண்ணி கணக்கிட்டா கூறமுடியும் என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.
6 மாதங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்ட புகார் மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத CBFC தரப்போ நீதிமன்றத்தில் சதீஸ் பராசரனுக்கு ஆதரவாக மெளன விரதத்தை கடைபிடித்தது

இதோ.. ஜனநாயகன் திரைப்பட வழக்கில் அதே சதீஷ் பராசரன் CBFC சான்றிதழுக்காக வாதாடுகிறார். மத்திய அரசு உடனடியாக எல்லாம் தர இயலாது என முரண்டு பிடிக்கிறதஏதாவது மதக்கலவரத்தை தூண்டும் படமென்றால் தான் உடனே சென்சார் சான்றிதழ் தருவார்கள் போல’’ என்று குறிப்பிடுகிறார்.
