டெல்லியில் தெருநாய்க்கடிகள் அதிகரித்து வந்த நிலையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் கடைசியாக நவம்பர் 7ம் தேதி அன்று நடந்த விசாரணையின் போது , நாடு முழவதிலும் உள்ள தேசிய நெடுஞசாலைகளில் உள்ள தெருநாய்களை அகற்றுமாறு மாநில அரசுகளுக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் உத்தரவிட்டிருந்தது.

நேற்று நடந்த விசாரணையில், தெருநாய்களால் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் பொதுமக்கள் அதிகம் கூடும் மருத்துவமனை , பள்ளிகள் போன்ற இடங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். நாய் எந்த மனநிலையில் இருக்கிறது. எப்போது கடிக்கும் என்பதை கணிக்க முடியாது. அதனால் பொது பாதுகாப்பு விசயங்களில் வருமுன் காப்பதே சிறந்தது என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இதற்கு நடிகை ரம்யா எதிர்வினை ஆற்றி இருக்கிறார். நாய் எப்போது கடிக்கும் என்று கணிக்க முடியாததால் வருமுன் காப்போம் ரீதியாக அவற்றை முன் கூட்டியே அப்புறப்படுத்த வேண்டும் என்று சொன்னதால், ஒரு ஆண் எப்போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவான், எப்போது கொலை செய்வான் என்பதும் யாருக்கும் தெரியாது. அதனால் எல்லா ஆண்களையும் சிறையில் அடைத்துவிடலாமா? என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
