இனி 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை விதித்து மத்திய அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
மேலும், பட்டப்படிப்பைக் காட்டிலும் குறைவான தகுதியைக் கொண்ட ஆசிரியர்களை கோச்சிங் சென்டரில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை வெற்றிகரமாக முடித்த பின்னரே, 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
கோச்சிங் சென்டருக்கு எதிரான புகார்களை மாணவர்கள், பெற்றோர்கள் அல்லது பயிற்சி மையத்தின் ஊழியர்கள் அளிக்கும் வகையிலான வழிமுறைகளை கோச்சிங் சென்டர் நிர்வாகம் செய்து தர வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
New Guidlines Link: மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறை