நாட்டிலேயே மின்தடை எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைவாகவும் தமிழ்நாட்டின் மின்சார நம்பகத்தன்மை வளர்ந்த நாடுகளுடன் சமமானதாக இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய மின்சாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட சேவை மதிப்பீட்டில், தமிழ்நாடு மின்சார வாரியம் 2022-23 நிதியாண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் ‘A’ Grade-க்கு முன்னேறியுள்ளது.
கடந்த 2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டுகளில் முறையே B மற்றும் B+ Grade தரவரிசையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் மீதான நம்பகத்தன்மைக்கு ‘A+ Grade’ பெற்றும் இணைப்பு மற்றும் பிற சேவைகளுக்கு ‘A Grade’ பெற்றும் TANGEDCO முன்னேறியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மின்சார வாரிய நிறுவனமான TANGEDGO, 3.2 கோடி நுகர்வோருக்கு சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.