கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜிஎஸ்டி சாலை ஓரத்தில், புதிய ரயில் நிலையத்திற்கான கட்டிடங்கள் மற்றும் நடைமேடைகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைய உள்ள கிளாம்பாக்கம் ரயில் நிலையம், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் கட்டப்பட்டுவிடும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை புதிய ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் 450 மீட்டர் நீளமுள்ள ஆகாய நடைமேடை(SkyWalk) அமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளது.
புதிய ரயில் நிலையத்தின் கட்டுமானச் செலவுக்காக தெற்கு ரயில்வேக்கு சுமார் 20 கோடி ரூபாயை, தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஒதிக்கியுள்ளது.
மூன்று தளங்களைக் கொண்டு அமையவுள்ள ரயில்வே நிலையம் ஒவ்வொன்றும் 12 பெட்டிகள் கொண்ட எலக்ட்ரிக்கல் மல்டிபிள் யூனிட் (EMU) ரயில்களுக்கு இடமளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தினசரி 1.5 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் TNSTC mofussil பேருந்துகளின் செயல்பாடுகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு விரைவில் மாற்றப்பட உள்ளது.
மேலும், தற்போது தாம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மற்றும் மாநிலத்தின் பிற வடமாநிலங்களுக்குச் செல்லும் சூப்பர் டீலக்ஸ் மற்றும் விரைவு TNSTC பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.