முதல்முறையாக கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 1 பில்லியன் அமெரிக்க டாலர் எலக்டிரானிக்ஸ் பொருள்களை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு சாதித்துள்ளது.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஒரே மாதத்தில் தமிழ்நாடு $1.05 பில்லியன் டாலர் மதிப்புள்ள எலக்டிரானிக்ஸ் பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது.
டிசம்பர் மாத இந்திய எலக்டிரானிக்ஸ் பொருள் ஏற்றுமதியில், தமிழ் நாட்டின் பங்கு சுமார் 40% அதிகரித்துள்ளது.
2023 ஏப்ரல்-டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாடு மட்டும் 6.64 அமெரிக்க டாலர் மதிப்புள்ள எலக்டிரானிக்ஸ் பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இது மொத்த இந்திய ஏற்றுமதியான 20.35 அமெரிக்க டாலரை ஒப்பிடும்போது, எலக்டிரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்திய அளவில் 32.6 சதவிகிதத்துடன் முன்னிலையில் இருக்கிறது.
ஏப்ரல்-டிசம்பர் 2023 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாயாக ($31.76 பில்லியன்) உள்ளதாக மத்திய அரசின் NIRYAT தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.