ஜனவரி 21-ம் தேதி நிறைவடைந்த 47வது சென்னை புத்தகக் கண்காட்சியில், பெரியாரின் வளர்ந்து வரும் மறுமலர்ச்சிக்கான சமிக்ஞையாக அமைந்துள்ளது.
தற்கால உலகிலும் கொண்டாடப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகிற, காலம் தாண்டிய மரபுகளைக் கொண்டுள்ள தந்தை பெரியாரின் தாக்கங்கள், சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியிலும் வெளிப்பட்டுள்ளது.
சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் பங்கேற்றிருந்த சுமார் 900 புத்தகக் கடைகளில், குறைந்தது 60 கடைகளில் தந்தை பெரியார் குறித்த புத்தகங்கள் வைக்கப்பட்டது என்பது அவரது முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி வழிநடத்திய தந்தை பெரியார் அவர்கள், சமகால எழுத்தாளர்களுக்கும் புதிய சிந்தனைகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கும் இலக்கியப் மனிதராக திகழ்கிறார்.
கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சென்னை புத்தகக் கண்காட்சி முடிவுற்று, வெறும் ஒரு வருட காலத்தில் ஏறத்தாழ 70 புதிய புத்தகங்கள் பெரியாரை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ளன.
இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் ‘பெரியாரும் அறிவியலும்’ என்கிற புத்தகம் உட்பட சுமார் 41 பெரியார் தலைப்புப் புத்தகங்களை ‘பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் (PSRPI)’ ஒரே ஆண்டில் வெளியிட்டுள்ளது.
பெரியார் தலைப்புகளின் கீழ் கருப்புப் பிரதிகள், அறம், கருஞ்சட்டைப் பதிப்பகம், விடியல் போன்ற பிற பதிப்பகங்களுடன் இணைந்து வெங்காயம் பதிப்பகம் சுமார் 12 புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
பெரியார் குறித்து இதுவரை மொத்தம் 790 புத்தகங்களை வெளியிட்டுள்ள PSRPI அமைப்பு, அதில் சுமார் 460 புத்தகங்கள் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வெளியிட்டுள்ளது. இது பெரியாரின் கொள்கைகள் சமகாலத்திற்கும் தேவை என்பதை உணர்த்துகிறது.
இந்தாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில், பல கடைகளில் காட்சிப்படுத்தப்பட்ட ‘இந்து தமிழ் திசை’ செய்தி நிறுவனத்தின் ‘என்றும் தமிழர் தலைவர்’ புத்தகம், அதிக அளவில் விற்பனையாகியுள்ளது. டிசம்பர் 31-ம் தேதி 2,000 பிரதிகளை அச்சிட்ட ‘இந்து தமிழ் திசை’, அவை வெறும் 12 நாட்களில் விற்றுத் தீர்த்ததாகத் தெரிவித்துள்ளது.
பதிப்பகங்கள் மட்டுமின்றி, பெரியாரின் சிந்தனைகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், மற்றும் பிற நாடுகளுக்கும் எடுத்துச் செல்ல தமிழ்நாடு அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாக, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் ‘பெரியார் சிந்தனைகள்’ என்கிற புத்தகத்தை மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், ரஷ்யன், அரபி, உருது, பிரெஞ்சு, இந்தி, ஸ்பானிஷ், ஜப்பானிஷ் என 10 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டின் 2022-2023 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டில், பெரியாரின் படைப்புகளை 21 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியிட ரூ.5 கோடியை அரசு ஒதூக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.