சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகள் செய்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை இலங்கை அரசு கொண்டுவந்துள்ளது.
சமூக ஊடகங்களில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் பதிவுகளை செய்யும் தனிநபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் கடுமையான சட்டத்தை இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
2022 இலங்கை பொருளாதார நெருக்கடியின் போது போராட்டக்காரர்களின் முக்கிய கருவியாக சமூக ஊடகம் இருந்தது. நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகச் செய்யும் அளவுக்கு கட்டாயப்படுத்தியது.
இந்த புதிய சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் பதிவுகளை செய்தவரின் பயனர் விவரங்களை வெளியிடத் தவறினால், சமூக ஊடக தளத்தின் நிர்வாகிகளுக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு இலங்கையில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்