கலைஞர்கள் தங்கள் படைப்பு சுதந்திரத்தைப் பாதுகாக்க உறுதியாக நிற்க வேண்டும் என மலையாளப் பட இயக்குநர் ஜோ பேபி PTI செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணலில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, சமீபத்தில் OTT தளத்திலிருந்து ஒரு படம் திரும்பப் பெறப்பட்டது போல, சிலர் பின்வாங்குகிறார்கள் என நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படத்தை மேற்கோள்காட்டி ஜோ பேபி வேதனை தெரிவித்தார்.
ஏதோ ஒரு குற்றத்தைச் செய்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள் என கூறிய ஜோ பேபி, அது திரைத்துறைக்கோ, கலைஞருக்கோ, சமுதாயத்திற்கோ நல்லதல்ல என அச்சம் தெரிவித்தார்.
இந்தியாவில் நடந்து வரும் சில நிகழ்வுகளைப் பற்றி தான் பயப்படுவதாகவும், திரைப்படங்கள் மத மற்றும் அரசியல் தணிக்கையை எதிர்கொண்டு வருவதாக அச்சம் தெரிவித்துள்ளார்.
இது திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து கலைஞர்களுக்கும் கவலை அளிக்கும் ஒரு போக்காக அமைந்துள்ளது என்று ஜோ பேபி மேலும் கூறினார்.
இன்று இந்தியாவில் திரைப்படங்கள் பலவிதமான தணிக்கை முறைகளை கடந்து செல்வது கவலையளிக்கும் ஒரு போக்கு என்று ஜோ பேபி கூறியுள்ளார்.
இயக்குநர் ஜோ பேபியின் சமீபத்திய திரைப்படமான ‘காதல் – தி கோர்’ படம், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை ஓரினச்சேர்க்கையாளராக நடிக்க வைத்து, இந்திய சினிமா துறையில் புதிய முன்னெடுப்பை செய்துக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.