நோய்களுக்கு சிகிச்சையளிக்க புதிய மருந்துகளை உருவாக்க உதவியாக ChatGPT போன்ற புதிய ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
ChatGPT என்பது பலதரப்பட்ட தலைப்புகள் மற்றும் சூழல்களில் மனிதனர்களைப் போல உரையைப் புரிந்துகொண்டு உருவாக்கக்கூடிய பல்துறை பயன்பாடாகும். எழுதுதல், மூளைச்சலவை செய்தல், கற்பித்தல் மற்றும் பல பணிகளுக்கு இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ChatGPT-யின் பயன்பாட்டால் ஈர்க்கப்பட்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று புதிய மருந்துகளை விரைவாக வடிவமைக்க உதவியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய பயன்பாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சூழலில், மருந்து வடிவமைப்பு செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாப்மேன் பல்கலைக்கழகத்தில் உள்ள Schmid College of Science and Technology விஞ்ஞானிகள் தனித்துவமான ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு (GenAI) பயன்பாட்டை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
‘drugAI’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயங்குதளம், தனித்தன்மை வாய்ந்த செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
‘BindingDB’ என்கிற பொது தரவுத்தளத்தில் இருந்து தரவைப் பெற்று DrugAI பயன்பாடு, புதிய தனித்துவமான மூலக்கூறு கட்டமைப்புகளை (Unique Molecular Structures) உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் ‘drugAI’ பயன்பாட்டில் ஆராய்ச்சியாளர்களால் புதிய வசதிகளை சேர்க்கக் கூடிய வகையில் விஞ்ஞானிகள் அதன் (Algorithm) அல்காரிதத்தை வடிவமைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது