தமிழ்நாடு அரசின் ‘முதல்வன் திட்டம்’ திட்டத்தின் மூலம் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
‘நான் முதல்வன் வேலை வாய்ப்புத் திட்டம்-2024’ மூலம் கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதி மாணவர்கள் பயணடைந்துள்ளனர்.
அந்தப் பகுதிகளில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் இறுதியாண்டு பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்
கடந்த 2022-2023-ம் ஆண்டில் மட்டும், நான் முதல்வன் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் சுமார் 1.19 லட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றிருந்தனர்.
அவர்களில் சுமார் 61,920 பேர் பொறியியல் பிரிவில் இருந்தும், 57,315 பேர் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் Cognizant Technology Solutions (CTS) India Private Limited, Tech Mahindra, TVS Group of Companies, Fox Conn Hon Hai Technology, Pegatron India Private Limited, Bosch Global Software Technologies Private Limited, Sutherlands Global போன்ற பெரு நிறுவனங்களில் தமிழ்நாடு மாணவர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்
News Source: The Hindu